D imman: ‘விவாகரத்து தந்த வேதனை.. செக்ஸி சாட்டிங் வாய்ப்பு.. ஒதுங்கி சென்ற குழந்தைகள்.. நொறுங்கி விழுந்த இசை! -டி.இமான்!
தனக்கும் முதல்மனைவிக்கும் இடையேயான மணமுறிவு குறித்து டி. இமான் பேசி இருக்கிறார்.
இது குறித்து இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “2008 -ல் எனக்கு திருமணம் நடந்தது. அப்பா, அம்மா பார்த்துதான் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்கள். அது ஒரு 12, 13 ஆண்டு காலம் நீடித்தது. ஒரு கட்டத்தில் அது சரியாக இல்லை என்ற ஒரு விஷயம் வந்த போது, நாங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்தோம்.
எனக்கு 2008 -ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது. அடுத்த மாதமே என்னுடைய தாயார் தவறி விட்டார். அதன் பின்னர் என்னுடைய அப்பாதான் என்னை பத்திரமாக பார்த்துக்கொண்டார். முதல் திருமணத்தில், எனக்கு இரு குழந்தைகள் உள்ளன. என்னுடைய உயிர் உள்ள வரை அவர்கள் மீது உள்ள பாசம், கொஞ்சம் கூட குறையப்போவதில்லை.
அந்த மணமுறிவுக்குப் பின்னர் நான் பெரிய மன அழுத்ததிற்குள் சென்றேன். என்னால் வேலையே செய்ய முடியவில்லை. நான் அப்படி இருந்ததே கிடையாது. என்னுடைய வாழ்கையில் இசையும், ஆன்மிகமும் இல்லாமல் போயிருந்தால், இந்த நேரம் இமானின் இரங்கல் செய்தி உங்களை வந்தடைந்து இருக்கும்.
நான் என்னை நினைத்து பெருமை படுகிற விஷயம்.. நான் புகைப்பிடித்தது கிடையாது.. மது அருந்தியது கிடையாது. எந்த பெண்ணின் பின்னாலும் சென்றது கிடையாது. என்னிடம் பெண்ணுடன் உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என்றாலும், போனில் செக்ஸியாக சாட்டிங் செய் என்று சொன்னவர்கள் உண்டு.
எனக்கு இசையை விட்டால் அடுத்தது குடும்பம்தான். இரவு 8 மணிக்கு வேலையை முடித்து விட்டு, குழந்தைகளோடு சென்று பேசமாட்டோமா, விளையாட மாட்டோமா என்று தோன்றும். அப்படித்தான் என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள், அவர்கள் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நொறுங்கி விட்டேன். அந்த வலியை, வேதனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
யாருமே, விரும்பிச் சென்று விவாகரத்தை பெறப்போவதில்லை. அந்த சூழ்நிலையில் இருந்து, அந்த ஆணி மீது உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும். சரி, எல்லா விருதுகளும் வாங்கியாயிற்று. நிறுத்திக்கொள்ளாலாம். திரைத்துறையை விட்டு விலகிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். இதை அப்பாவிடம் சென்று சொன்னேன். அவருக்கு அதில் விருப்பமே இல்லை.
முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் நிச்சயம் அப்பாவைப்பற்றி தெரியவரும். அந்த குழந்தைகள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை முழுவதுமாக எனக்கு இருக்கிறது. கடந்த 3 வருடங்களாக அவர்களது வாயில் இருந்து அப்பா என்ற வார்த்தையை கேட்கவேயில்லை. ஆனால், அமலியின் குழந்தை என்னை அப்பா... அப்பா.. என்று கூப்பிட்டு தினமும் 1000 முறை எனக்கு பதக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்