CWC Vichithra: ஜாக்கிங் போன இடத்தில் காதல்.. கொடைக்கானலில் அம்பலமான கிளாமர் நடிகை வேடம்! - விசித்திராவின் காதல் கதை!
நடிகை விசித்ரா தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
அவர் பேசும் போது, “தெலுங்கு படம் ஒன்றிற்காக, நான் கேரளாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த ஹோட்டலில் இவர் மேனஜராக இருந்தார். அந்த ஹோட்டலில், அதிகாலை நான் வாக்கிங் செல்ல வேண்டும் என்று சொன்ன போது, அங்கிருந்த பாதுகாவலர் அனுமதிக்கவில்லை.
அந்த சமயத்தில் இவர் ஜாக்கிங் சென்று வந்தார். இதைப்பார்த்து எனக்கு கோபம் வந்து விட்டது. உடனே நான் அங்கிருந்தவர்களுடன் சண்டை போட ஆரம்பித்து விட்டேன். அதே போல ஹோட்டலில் டீ சரியில்லை என்று தினமும் சண்டை போட்டேன். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், ஹோட்டல் கிச்சனுக்குள் ஏறிவிட்டேன். இவர் மேனஜர் என்பதால் பிரச்சினைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படித்தான் எங்களின் அறிமுகம் இருந்தது.
பிறகு என்னுடன் அவர் ஜாக்கிங் வந்தார். அப்படியே நாங்கள் பழகினோம். என்னுடைய பிறந்தநாள் அன்று இவர் பூங்கொத்து கொடுத்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார். எங்களுடைய திருமணம் காதல் திருமணம் என்பதால் அவருடைய வீட்டில் இருந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்காக வந்தார்.
திருமணம் நடந்தது. அப்போது வரை நான் கிளாமரான நடிகை என்று இவருக்குத் தெரியாது. நாங்கள் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்று இருந்தோம். அப்போது ஒரு ரசிகர் என்னை கண்டுபிடித்து, என்னிடம் ஒருமாதிரியாக நடந்துகொண்டார். அப்போதுதான் நான் என்ன மாதிரியான நடிகை என்பதை தெரிந்து கொண்டார். அன்றிலிருந்து இவர் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். எனக்காக வந்த இவருக்காக நான் சினிமாத்துறையை விட முடிவெடுத்தேன்.” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: பிஹைண்ட் வுட்ஸ்!
டாபிக்ஸ்