தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Coolie: சம்பவம் லோடிங்.. கூலி அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Coolie: சம்பவம் லோடிங்.. கூலி அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Aarthi Balaji HT Tamil
Jul 05, 2024 11:35 AM IST

Coolie: தலைவர் 171 படத்தின் அப்டேட் ஒன்றைய சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன் படி படத்தின் படப்பிடிப்பு இன்று ( ஜூலை 5 ) முதல் தொடங்குகிறது.

சம்பவம் லோடிங்.. கூலி அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
சம்பவம் லோடிங்.. கூலி அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

Coolie: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தினை வைத்து இயக்கும் படத்தின் டைட்டில் தொடர்பான டீஸரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இப்படம் ரஜினிகாந்தின் திரை வரிசையில் 171 ஆவது படமாக வருகிறது. இந்த படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்ய இருப்பதால், படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சமீபத்தில் படக்குழு ரஜினிகாந்தின் 171 ஆவது படம் குறித்த போஸ்டரை மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அப்போது வெளியிடப்பட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கோல்டு கைக்கடிகாரங்களை, விலங்குபோல் மாட்டி, கூலிங் கிளாஸ் அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கிறார். அந்த ஸ்டில் ரசிகர்கள் பலரை ஈர்த்தது.

தலைவர் 171 படமும் ரஜினிகாந்தின் படமாக வருமா, அல்லது லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா எனவும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ராகவா லாரன்ஸும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் 171 அப்டேட்

இந்நிலையில் தலைவர் 171 படத்தின் அப்டேட் ஒன்றைய சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன் படி படத்தின் படப்பிடிப்பு இன்று ( ஜூலை 5 ) முதல் தொடங்குகிறது.

இது தொடர்பான அறிவிப்பில், “ சூப்பர் ஸ்டார் - லோகி சம்பவம் ஆரம்பம் ! கூலி படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது “ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில், ‘’ரஜினிகாந்திடம் படம் தொடர்பாக தொடர்ந்து போன் மூலம் பேசி வருகின்றேன். இந்தப் படத்தில் பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். தலைவர் 171 படத்துக்குண்டான திரைக்கதை எழுதுவதில் பிஸியாக இருப்பதால், என்னை தொடர்புகொண்டவர்களிடம் தொடர்பில் இருக்க முடியவில்லை’’என்றார்.

ரஜினிகாந்த் தனது ரங்கா படத்தில் பேசிய பழைய வசனத்தை கூலி திரைப்படத்தில் பேசியுள்ளார். ‘’அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள், தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு;

அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே;

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே;

சோறு உண்டு;

சுகம் உண்டு;

மது உண்டு;

மாது உண்டு;

மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு போடா’ என்னும் பட வசனத்தை மாஸாகப் பேசியுள்ளார். இந்த வசனம் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.