பேன்டஸி விரும்பி.. சமகால அரசியலை அடித்து ஆடும் கலைஞன்.. சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று..
தம்மைச் சுற்றி நடக்கும் அரசியலை மிகவும் எதார்த்தமாக, போகிற போக்கில் பேசி பட்டென உடைத்து எதார்த்தத்தை விளக்கும் இயக்குநர் சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று.

ஓவியராகவும் இயக்குநராகவும் நம்மில் பலருக்கும் தெரிந்த சிம்பு தேவனின் இயற் பெயர் செந்தில் குமார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் பிரியமும் ஆர்வமும் கொண்டவர்.
சிறுவயதில் தனது அண்ணனை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட சிம்பு தேவன், என்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும், எந்த நடிகருக்கு ரசிகனாக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளத் தொடங்கினாராம்.
சிம்புதேவனை சூழ்ந்த காமிக்ஸ் உலகம்
3ம் வகுப்பு முதல் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியபோது, அது நம்மைச் சுற்றி இல்லாத ஒரு பேன்டஸி கதையைக் கொண்டிருந்தாலும், அது எப்படியோ ஒரு உலகத்தை நம்மில் கட்டமைத்துவிடும். இந்த காமிக்ஸ்கள் நம்மையும் அறியாமல், பல அறிவியல், அரசியல் விஷயங்களை நம் தலைக்குள் ஏற்றிவிடும். அது எளிய நடையில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை தரும் என்பதில் உறதியாக இருந்திருக்கிறார் சிம்பு தேவன்.