Vijay Antony: தூங்க சென்ற மகள்.. கைவிட்ட கடவுள்.. காவு வாங்கிய தூக்கு கயிறு.. கதறும் குடும்பம்! - என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony: தூங்க சென்ற மகள்.. கைவிட்ட கடவுள்.. காவு வாங்கிய தூக்கு கயிறு.. கதறும் குடும்பம்! - என்ன நடந்தது?

Vijay Antony: தூங்க சென்ற மகள்.. கைவிட்ட கடவுள்.. காவு வாங்கிய தூக்கு கயிறு.. கதறும் குடும்பம்! - என்ன நடந்தது?

Kalyani Pandiyan S HT Tamil
Sep 19, 2023 07:50 PM IST

காவேரி மருத்துவமனையில் விஜய் ஆண்டனி மகளின் உடலானது வைக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி மகள் மீரா சென்னை ஆழ்வார் பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நேற்று வழக்கம் போல தந்தையின் படுக்கறையில் உறங்க சென்றவர் காலை 3 மணி அளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் சொல்லுகின்றன. 

காலையில் இதைப்பார்த்த குடும்பத்தினர் உதவியாளருடன் அவரது உடலை கீழே இறக்கி இருக்கிறார்கள். இதனையடுத்து மீராவை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்று இருக்கிறார்கள். 

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மன அழுத்ததில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன

மீரா தற்கொலை தொடர்பாக விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பள்ளியில் படிக்கும் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 

காவேரி மருத்துவமனையில் விஜய் ஆண்டனி மகளின் உடலானது வைக்கப்பட்டு இருக்கிறது. அவரை பார்ப்பதற்காக விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். 

உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் காலை 10 மணியளவில் மகளின் உடலானது விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மீராவிற்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது!

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.