தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: தேர்தல் விதிமுறை மீறல் - பொதுமக்களுக்கு இடையூறு!தளபதி விஜய் மீது போலீசில் புகார்

Thalapathy Vijay: தேர்தல் விதிமுறை மீறல் - பொதுமக்களுக்கு இடையூறு!தளபதி விஜய் மீது போலீசில் புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 20, 2024 02:36 PM IST

தேர்தல் விதிமுறைகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குச்சாவடிக்குள் சென்றதாக நடிகர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.

வாக்களிக்க வந்த விஜய்யை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போலீசார்
வாக்களிக்க வந்த விஜய்யை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போலீசார்

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் மீது புகார்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவர் வாக்களிக்க வரும்போது புகைப்படம், விடியோ எடுக்க ஊடகத்தினர் போட்டி போட்டனர். அத்துடன் பொதுமக்கள் பலரும் செஃல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

முன்னதாக, வாக்களிக்க வரும் தன்னுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்தார் தளபதி விஜய். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விபத்தில் சிக்கினாரா விஜய்?

விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஷுட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர் சென்னை திரும்பியுள்ளாராம்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க சைக்களில் வந்த தளபதி விஜய், இந்த முறை ரசிகர்களுடன் வந்து வாக்களித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் இடது கையில் காயம் காரணமாக பிளாஸ்ட் ஒட்டப்பட்டிருந்தது. வாக்களிப்பதற்கு முன்னர் அவரது கையில் ஏற்பட்டிருந்த காயம் தெளிவாக தெரிந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, ரஷ்யாவில் கோட் படப்பிடிப்பின்போது விஜய்க்கு கை, தலை பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள், முதல் முறை வாக்காளர்கள், வயது முதிர்ந்தவர்கள் என ஆர்வமாக வரிசையில் இருந்த வாக்களித்தனர். அதேபோல் திரைப்பிரபலங்களுக்கும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஆஜரான பிரபலங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்குமார், தளபதி விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பலரும் காலையிலேயே வாக்களித்தனர். இதில் கவனிக்கத்தக்க விஷயமாக இவர்கள் அனைவரும் ஒயிட் டிரஸ்ஸில் ஆஜராகி தங்களது வாக்குகளை செலுத்தினர்.

தொடர்ந்து நடிகர் சூர்யா, த்ரிஷா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராகவா லாரன்ஸ், ஆர்யா, யோகி பாபு உள்பட பலரும் தங்களது வாக்குகளை அளித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்