தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  College Super Stars: வெளியான காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் பாடல்: ரவுசு கூட்டும் யுவன் சங்கர் ராஜா!

College Super Stars: வெளியான காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் பாடல்: ரவுசு கூட்டும் யுவன் சங்கர் ராஜா!

Marimuthu M HT Tamil
Dec 12, 2023 05:51 PM IST

நடிகர் கவின் நடித்த புதிய படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஸ்டார் படத்தில் இருந்து காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் என்னும் பாடல் வெளியீடு
ஸ்டார் படத்தில் இருந்து காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் என்னும் பாடல் வெளியீடு

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை எழில் அரசு செய்துள்ளார். படத்தொப்பினை பிரதீப் இ மேற்கொண்டுள்ளார். இசையினை யுவன் சங்கர் ராஜா செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்திலும் யுவன்சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பேசப்பட்ட நிலையில், அக்கூட்டணியே மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்களும் இசையும் பேசப்படும் எனக்கூறப்படுகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடலை லோகேஷ் கனகராஜ் இன்று தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் எனப்பெயரிடப்பட்ட இப்படத்தின் முதல் பாடல் சரியாக, சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் பிறந்தநாளான இன்று டிசம்பர் 12ஆம் தேதி நண்பகல் 12:12 மணிக்கு வெளியிடப்பட்டது.

இப்பாடலை யுவன்சங்கர் ராஜா பாடி, இசையமைத்துள்ளார். கல்லூரியில் நடக்கும் கதை என்பதால், இப்பாடலும் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை அப்படியே நினைவூட்டும் விதமாக ஜாலியாக வெளியாகியுள்ளது.

இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய இரு தயாரிப்புநிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

லோகேஷ் இப்பாடலை தனது எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்தபோது, ’#STAR இன் முதல் சிங்கிள் வீடியோவை வெளியிட்டதில் மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நல்வாழ்த்துகள். விண்டேஜ் யுவன் ஷங்கர் ராஜா இசையை இதில் கேட்கமுடியும்’ எனக்கூறி அப்பாடலின் யூட்யூப் லிங்கினை வெளியிட்டுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்