Actor Prasanth and Vikram: பிரசாந்த் - விக்ரம் இடையே இருப்பது பனிப்போரா?
நடிகர் பிரசாந்த் - விக்ரம் இடையே பனிப்போர் நிகழ்ந்ததாக, பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் இவர் நடித்த 7 படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், அதிர்ஷ்டம் இல்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டவர். 1999ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் சேது படம் ரிலீஸானபோதுதான், விக்ரம் என்ற நடிகர் ஒருவர் இருக்கிறார் என தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தெரியவந்தது. அந்தளவுக்கு சேது படத்தின் பாடல்கள் ஹிட்டடித்தன. படமும் 100 நாள்கள் ஓடி வசூல் சாதனைப் புரிந்தது. இந்நிலையில் தான் கஷ்டப்படும்போது, தனது மாமாவான நடிகர் தியாகராஜனும் நடிகர் பிரசாந்த்தும் உதவாமல், ஒதுக்கி வைத்ததாக நடிகர் விக்ரம் நிறையநாட்கள் வருத்தத்துடன் இருந்துள்ளார்.
இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ' நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடித்த 7 திரைப்படங்கள் அடுத்தடுத்து ஃபிளாப் ஆகின. இதனால் துரதிர்ஷ்டமான கதாநாயகன் விக்ரம் என்றும்; அவரை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் தான் எனவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிய மீரா படத்தில் கூட விக்ரம் தான் கதாநாயகன். மீரா படம் அப்போதே விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம். அப்படத்தில் வரும் பாடல்களை டிவியில் இப்போது பார்த்தாலும் அவ்வளவு அருமையாக இருக்கும். ஆனால், என்ன காரணமோ, அந்தப்படம் ஓடவில்லை. அப்படம் ஓடாதபோது, விக்ரமை நிறைய விமர்சித்தார்கள். கிண்டலடித்தார்கள். இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவானு தயாரிப்பாளர்கள் கேட்டனர். அதனால், ராசியில்லாத நடிகர் என கோலிவுட் ஒதுக்க ஆரம்பித்தது. அப்போது இயக்குநர் பாலாவின் அறிமுகம் கிடைக்கவே, சேது படத்தில் வாய்ப்புகிடைத்தது. சேது படத்தை எடுத்துமுடித்தபின், அதை வாங்க ஆள்கள் வரவில்லை. ஒரு வழியாக குறைவான தொகைக்கு அப்படத்தை அதன் தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் ஈட்டினர். அப்போது கூட நடிகர் விக்ரமின் ராசியினால் தான், தயாரிப்பாளர் லாபம் ஈட்டவில்லை என விமர்சிக்கப்பட்டார்.
பிரசாந்துக்கும் விக்ரமுக்கும் இடையே உள்ள பந்தம்? நடிகர் விக்ரமின் மாமா பையன் தான் பிரசாந்த். அந்த சமயத்தில் டாப் ஸ்டாராக இருந்த பிரசாந்த், விக்ரமை கண்டு கொள்ளவில்லை. ஒரு சின்ன பரிந்துரை கூட செய்தது இல்லை. அதேபோல், அவரது மாமா நடிகர் தியாகராஜனும். இதனால், குடும்பத்தினர் யாரின் ஆதரவின்றி ஜெயித்துக்காட்டவேண்டும் என வைராக்கியத்துடன் வாய்ப்புத் தேடி, முன்னேறி காட்டியுள்ளார், நடிகர் விக்ரம். இடையில், நடிகர் பிரசாந்தின் விவகாரத்து குறித்து விக்ரமிடம் கேட்டதற்கு,நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டார். ஆனால், இப்போது நடிகர் பிரசாந்துக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை’ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்