‘நீ அழகா இருக்கேன்னு சொல்றதா என் வேலை?’ மீரா ஜாஸ்மினை கடிந்த ஆர்தர் வில்சன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நீ அழகா இருக்கேன்னு சொல்றதா என் வேலை?’ மீரா ஜாஸ்மினை கடிந்த ஆர்தர் வில்சன்!

‘நீ அழகா இருக்கேன்னு சொல்றதா என் வேலை?’ மீரா ஜாஸ்மினை கடிந்த ஆர்தர் வில்சன்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 03, 2023 06:15 AM IST

‘ஒளிப்பதிவாளர்கள் நடிகைகளோடு நெருக்கமாக இருப்பார்கள் என்று கூறுவார்கள். நான் இதுவரை யாருடனும் போனில் பேசியதில்லை’- ஆர்தர் வில்சன்!

நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்
நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்

‘‘கமல் சார் ஒரு பல்கலை கழகம் மாதிரி. அவருடன் 3 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். முதல் படம் பம்மல் கே சம்மந்தம், அப்புறம் பஞ்சத்திரம், அதன் பின் அன்பே சிவம். கமல் சார் அலுவலகம் போனபோது, காலையில் போனால் இரவு முழுக்க உணவு இடைவெளியை தவிர மற்ற நேரம் முழுவதும் கமல் சார் தான் பேசினார். 

வெளியே வரும் போதும், ப்ரெஷ் மூடோடு வந்தேன். என் சினிமா வாழ்க்கையை, கமல் சாருக்கு முன், பின் என பிரிக்கலாம். பஞ்சதந்திரம் படம் 46 நாளில் முடித்தோம். 23ம் புலிகேசி படம் ஸ்கிரிப்ட் பார்த்ததுமே எனக்கு தெரிந்துவிட்டது, இந்த படம் செம்ம ஹிட் என்பது. ஆனந்தம், வானத்தைப் போல, நான் கடவுள் ஆகிய படங்களும் அதோ போல தான் எனக்கு முன்கூட்டியே தோன்றிவிட்டது. 

என்றைக்குமே கதையோடு கேமரா காட்சிகள் இருக்க வேண்டும். இல்லை என்றால், அது பொருந்தாது. ஒளிப்பதிவாளர்கள் நடிகைகளோடு நெருக்கமாக இருப்பார்கள் என்று கூறுவார்கள். நான் இதுவரை யாருடனும் போனில் பேசியதில்லை. அது நடிகை என்று இல்லை, நடிகர்களுடனும் நான் பேச மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசுவதோடு சரி. 

ஒரு நாள் மீரா ஜாஸ்மின் என்னிடம் வந்து , ‘நான் அழகா இருக்கேனா?’ என்று கேட்டார். ‘நீ அழகா தான்ம்மா இருக்கே’ என்று நான் கூறினேன். ‘அப்போ நீங்க ஏன், என்னை அழகா இருக்கேன்னு சொல்லவில்லை?’ என்று என்னிடம் கேட்டார். ‘உன்னை அழகா இருக்கேன்னு சொல்றதா  என் வேலை?’ என நான் சொன்னேன். நல்ல பொண்ணு அது.

இயக்குனர்கள் அவர்களின் கனவை கேமரா வழியாக தான் பார்க்கிறார்கள். அதனால் கேமரா பணி முக்கியமானது. ஒளிப்பதிவாளருக்கு முதலில் சுதந்திரம் வேண்டும். ரவிக்குமார் மட்டும், இங்கே வை, அங்கே வை என கேமராவை வைக்கச் சொல்வார். மற்றபடி, யாரும் கேமரா விவகாரத்தில் தலையிட மாட்டார்கள். 

என்னை கவர்ந்த நடிகர் கமல். அஜித் உடன் ஜி, பூவெல்லாம் உன் வாசம், வரலாறு படங்கள் பண்ணேன். அவர், ரொம்ப ஜாலியான டைப். உள்ளேன் ஐயா என்கிற அறிவுமதி சார் இயக்கிய படத்தில் நடிக்கும் போதே எனக்கு அஜித்தை தெரியும். அப்போ ரொம்ப சின்ன பையன். விஜய் உடன் ஷாஜகான் படம் பண்ணேன். அவரும் ஜாலியான ஆள் தான்,’’

என்று ஆர்தர் வில்சன் தன் பேட்டியில் கூறியுள்ளார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.