Actress Samyutha: 'ஜோசியர் சொன்னது போலவே நடந்துருச்சு'..ஒரே மாதத்தில் கணவரை பிரிந்த நடிகை சம்யுதா வேதனை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Samyutha: 'ஜோசியர் சொன்னது போலவே நடந்துருச்சு'..ஒரே மாதத்தில் கணவரை பிரிந்த நடிகை சம்யுதா வேதனை!

Actress Samyutha: 'ஜோசியர் சொன்னது போலவே நடந்துருச்சு'..ஒரே மாதத்தில் கணவரை பிரிந்த நடிகை சம்யுதா வேதனை!

Karthikeyan S HT Tamil
May 14, 2023 02:14 PM IST

Cine Actress Samyutha: திருமணமாகி ஒரே மாதத்தில் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து சின்னத்திரை நடிகர் சம்யுதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை சம்யுதா
நடிகை சம்யுதா

இதனிடையே, சின்னத்திரை நடிகை சம்யுதா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இருவரும் இன்ஸ்டாகிராமில் இருந்து தங்களது திருமண புகைப்படத்தை நீக்கியதால் இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இந்நிலையில் திருமணமாகி ஒரே மாதத்தில் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து நடிகை சம்யுதா முதன்முறையாக இன்ஸ்டாகிராம் லைவ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், திருமணத்துக்கு முன்பே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. திருமண அழைப்பிதழ்கள் அடிப்பதில் தொடங்கி, திருமண புடவை எடுப்பது வரைக்கும் பல பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. என்னுடைய விருப்பப்படி திருமணத்தில் எதுவுமே நடக்கவில்லை. நான் எல்லாமே விஷ்ணுகாந்துக்காக பொறுத்துக் கொண்டேன்.

இதனிடையே திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய போன் காலை விஷ்ணுகாந்த் எடுக்காமல் தவிர்த்து விட்டார். விஷ்ணுகாந்த் வீட்டிலும் இல்லாததால் நான் அப்போதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். பிறகு சமாதானமாகி தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம் ஒன்றாக தான் வாழ்ந்தோம். அப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும் போது எதற்கெடுத்தாலும் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்.

விஷ்ணுகாந்த்தை நம்பி நான் ஏமாந்துவிட்டேன். எனக்கு 22 வயதுதான், அவருக்கும் எனக்கும் 10 ஆண்டுகள் வித்தியாசம். இருப்பினும் எனது பெற்றோரிடம் அடம்பிடித்து என்னை திருமணம் செய்துகொண்டார். என் ஜாதகப்படி 25 வயதுக்குள் திருமணம் நடந்தால் அந்த திருமணம் நிலைக்காது, இரண்டாவது திருமணம்தான் நிலைக்கும் என்று இருக்கிறது. இதை நானும் எனது அம்மாவும் விஷ்ணுகாந்துவிடம் கூறி இருக்கிறோம். ஆனால், ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை சம்யுதாவை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று கூறி தான் விஷ்ணுகாந்த் என்னை திருமணம் செய்துகொண்டார்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.