Chinmayi sripada: சுசித்ராவுக்கு அவ்வளவு பொறாமை.. சின்மயிய அமெரிக்கா முழுதும் கேவலப்படுத்தி..’ - சின்மயி தாயார்
Chinmayi sripada: அதை சரி செய்ய வேண்டியது யார்? அவளை கட்டிக்கொண்ட கணவன்தானே. நீ கல்யாணம் செய்து கொண்ட நான்கு நாட்களில் அவளது குறைகள் என்னவென்று உனக்கு நன்றாக தெரிந்திருக்கும். - சின்மயி தாயார்
Chinmayi sripada: சர்ச்சைக்கு பேர் போன சுசித்ரா மற்றும் கார்த்திக்குமார் பற்றி சின்மயி தாயார் பத்மஹாசினி கேடகம் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருக்கிறார்.
நல்ல குடும்பம்
இது குறித்து அவர் பேசும் போது, “சுசித்ரா கார்த்திக் குமார் கல்யாணம் செய்து கொள்ளும் பொழுது, கார்த்திக் குமாரிடம் என்ன இருந்தது? அன்று, கார்த்திக் குமார் யார் என்று யாருக்காவது தெரியுமா…? கார்த்திக் குமாருடைய பலமாக இருந்தது அவரது பெற்றோர் அவருக்காக நல்லபடியாக சேர்த்த சொத்து. அவர்களது குடும்பமும் நல்ல குடும்பம்.
அப்படி இருக்கும் பொழுது, கார்த்திக் குமார் அந்த குடும்பத்தில் மனைவியாக ஒரு பெண்ணை கொண்டு வந்து, வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இப்படித்தான் என் மனதில் அது படுகிறது. அவருடைய எண்ணம் அப்படியாக இருந்திருக்கலாம், இல்லாமலும் இருந்திருக்கலாம். சுசித்ரா மிக மிக திறமைசாலியான ஒரு பெண். ஒரு சில குறைகள் எல்லோரிடமும் இருக்கும். அதே போலதான் சுசித்ராவிற்கும் குறைகள் இருந்தன.
கார்த்திக்குமார்தான் உடன் இருந்திருக்க வேண்டும்
ஆனால், அதை ஒரு கணவராக நீங்கள் அனுசரித்து, அதை கொண்டு செல்லும் விதமாக கொண்டு சென்று, அவளை உங்களது கைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். சுசித்ரா அப்போது எல்லா இடங்களிலும் பாடிக்கொண்டிருந்தாள். அவருடைய கேரியர் மிகவும் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது. அவளுடைய பலவீனமே அவளுடைய பொறாமைதான். அந்த பொறாமையின் வழியாக, அவள் எடுக்கக்கூடிய தவறான முடிவுகள், அவளை தவறான செயல்களுக்கு இணங்கச் செய்து விடுகிறது.
அதை சரி செய்ய வேண்டியது யார்? அவளை கட்டிக்கொண்ட கணவன்தானே. நீ கல்யாணம் செய்து கொண்ட நான்கு நாட்களில் அவளது குறைகள் என்னவென்று உனக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதை நீ ஒரு கணவனாக அருகில் இருந்து கவனித்து மாற்றியிருக்க வேண்டும். உன்னுடைய அன்பு அவளை வேறு மாதிரியாக மாற்றி இருக்கும்.ஆகையால் இப்போது அவளுக்கு உதவித் தேவைப்படுகிறது. அந்த உதவி மருந்து மாத்திரை அல்ல. அளவற்ற அன்பு. முதலில், உனக்கு உன் மீது அளவற்ற அன்பு செலுத்த தெரிய வேண்டும். நீ இன்னும் பல விஷயங்களுக்கு தகுதியானவள்.
தவறு நடந்திருக்கிறது
உன் வாழ்க்கையில் நிச்சயமாக தவறு நடந்திருக்கிறது. சில ஜாதகங்கள் கர்ம ஜாதகமாக அமைந்து விடும். என்னுடைய ஜாதகமும் கூட கர்ம ஜாதகம் தான். கார்த்திக் குமார் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து வருகிறார். அதில் அவருக்கு சப்ஜெக்டே கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அமெரிக்கா முழுவதும் அவர் ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் போது, அதில் சின்மயி சம்பந்தப்பட்ட விஷயங்களை கருப்பொருளாக வைத்து, பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.
அவருக்கு வேறு சப்ஜெக்டே கிடைக்கவில்லையா என்ன.. அவை எனக்கு தெரியும் போது, நான் விக்கி விக்கி அழுதேன். ஒரு தாய்க்கு என்ன மாதிரியான சோதனையை கொடுக்கக் கூடாதோ அதை அனைத்தையும் அவர் கொடுத்தார்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்