Chinmayi: ப்ளீஸ் சார்.. வைரமுத்து விஷயத்திம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த சின்மயி-chinmayi kept request to cm stalin against vairamuthu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chinmayi: ப்ளீஸ் சார்.. வைரமுத்து விஷயத்திம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த சின்மயி

Chinmayi: ப்ளீஸ் சார்.. வைரமுத்து விஷயத்திம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த சின்மயி

Aarthi Balaji HT Tamil
Mar 10, 2024 03:51 PM IST

Chinmayi Post: நூல் வெளியீட்டு விழாவின் போது முதலமைச்சர் ஸ்டாலின், வைரமுத்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பாடகி சின்மயி கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளார்.

மீடூ விஷயத்தில் அரசியலில் இருக்கும் சில பெண்களே, நான் குற்றம் சாட்டிய நபரை, ஜென்டில்மேன் என்று சொன்னார்கள். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், உங்களை அதே போன்று துன்புறுத்தி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

மீடியாவில் தான் நிறைய பெயர்கள் வெளிவந்தன. எம் ஜி அக்பரை அத்தனை பெண்கள் குற்றம் சாட்டினார்கள். 30 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு, 19 வயதில் ஏன் இல்லை என்ற கேள்வி போல அறிவிலித்தனம் கிடையவே கிடையாது.

மீடூ விஷயத்தில் அரசியலில் இருக்கும் சில பெண்களே, நான் குற்றம் சாட்டிய நபரை, ஜென்டில்மேன் என்று சொன்னார்கள். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், உங்களை அதே போன்று துன்புறுத்தி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

மீடியாவில் தான் நிறைய பெயர்கள் வெளிவந்தன. எம் ஜி அக்பரை அத்தனை பெண்கள் குற்றம் சாட்டினார்கள். 30 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு, 19 வயதில் ஏன் இல்லை என்ற கேள்வி போல அறிவிலித்தனம் கிடையவே கிடையாது.

கவி பேரரசு வைரமுத்து சமீபத்தில் 'மகா கவிதை' நூல் எழுதி இருந்தது. இந்த நூலை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஐனவரி மாதம் வெளியிட்டார்.

இது தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்று வருகிறது.

பெருந்தமிழ் விருது வாங்கிய கவிஞர் வைரமுத்து

இதனிடையே மலேசியாவில் நடந்த பிரமாண்ட விழாவில், மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துவின் 'மகா கவிதை' நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி வழங்கின சிறப்பு கவனிப்பு கொடுத்தனர்.

இந்த விருதை கவிஞர் வைரமுத்துவிற்கு, மலேஷிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும், தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் இணைந்து வழங்கினர்.

வைரமுத்து பதிவு

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியீட்டு இருந்தார்.

அதில், “மலேசியாவில்

மகா கவிதைக்குப்

பெருந்தமிழ் விருதாக

1லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது;

இந்திய மதிப்பில்

ரூபாய் 18லட்சம் ஆகும்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

டத்தோஸ்ரீ சரவணன்

வழங்கினர்

தமிழில் எது இல்லை என்ற

கேள்விக்குப் பதில்தான்

மகா கவிதை

தமிழர்கள் இதுகுறித்து

உரையாடுவார்கள் என்றேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு பதிவில், “ மலேசியாவில், 'மகா கவிதை' 1 லட்சம் ரிங்கிட் விருது பெற்றது, இது 18 லட்சம் ரூபாய்க்கு சமமான தொகை. மலேசிய தமிழ் வளர்ச்சி பேரவை மற்றும் தமிழ் மொழியியல் மன்றம் இணைந்து இந்த விருதை டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மற்றும் டத்தோ ஸ்ரீ சரவணன் ஆகியோர் எனக்கு வழங்கினர். தமிழனின் வெற்றி!.

மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனை சந்தித்து அன்பு செலுத்தினேன் தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் உடனிருந்தார் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலப் பிள்ளைகளின் எண்ணிக்கையில் உள்ளது என்றனர் தலைவர்கள் “ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் முன்னதாக நூல் வெளியீட்டு விழாவின் போது முதலமைச்சர் ஸ்டாலின், வைரமுத்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பாடகி சின்மயி கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளார்.

சின்மயி பதிவு

அதில், “ சாா் சாா்!! ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் உங்கள் molesterai kattupaduthungalllll ப்ளீஸ் சார், ப்ளீஸ் சார். எங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுங்கள். Pala pala pangal ivarin kaiyil பாதிக்கப்பட்டவர்களாக மாறுகிரார்கள் மெல்லிசை பரவல் முறைகேடுகள் சாா் ப்ளீஸ் சார்.. “ எனக் குறிப்பிட்டு உள்ளார். பாடகி சின்மயி வெளியீட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.