Sivakarthiyen: இமான் பற்ற வைத்த நெருப்பு; உச்சக்கட்ட உஷார்.. அனலில் வேகாத சிவா.. வீட்டுக்கு கதவை தட்டிய வெற்றி! -எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthiyen: இமான் பற்ற வைத்த நெருப்பு; உச்சக்கட்ட உஷார்.. அனலில் வேகாத சிவா.. வீட்டுக்கு கதவை தட்டிய வெற்றி! -எப்படி?

Sivakarthiyen: இமான் பற்ற வைத்த நெருப்பு; உச்சக்கட்ட உஷார்.. அனலில் வேகாத சிவா.. வீட்டுக்கு கதவை தட்டிய வெற்றி! -எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 13, 2024 10:52 AM IST

நாம் பதட்டமாகும் பொழுது அடுத்தவர்களின் ஆலோசனையை கேட்டு முடிவு எடுக்கும் பொழுது, நம்முடைய முடிவு தவறாக செல்லும் பொழுது, ஒரு விஷயம் தவறாக செல்லும்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அதனைப்பிடித்து கொண்ட நெட்டிசன்களும், திரை விமர்சகர்களும் சிவகார்த்திகேயன் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் எதற்கும் ரியாக்ட் செய்யாத சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படம் மூலம் சினிமா கேரியரில் மீண்டும் தன்னுடைய வெற்றியை நிலை நாட்டி இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து பிரபல விமர்சகரான செய்யாறு பாலு ஆகாயம் யூடியூப் சேனளுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது,

 " நாம் பதட்டமாகும் பொழுது அடுத்தவர்களின் ஆலோசனையை கேட்டு முடிவு எடுக்கும் பொழுது, நம்முடைய முடிவு தவறாக செல்லும் பொழுது, ஒரு விஷயம் தவறாக செல்லும்.

ஒருவன் உங்களை தொந்தரவு செய்கிறான் என்றால் உங்களிடம் இருந்து அவன் ரியாக்ஷனை எதிர்பார்க்கிறான் என்று அர்த்தம். நீங்கள் ரியாக்ஷன் கொடுத்தீர்கள் என்றால், அங்கே மாட்டிக் கொண்டீர்கள் என்று பொருள். அதில் சிவகார்த்திகேயன் மிகவும் உஷார்.

 காரணம் என்னவென்றால் அவர் அடிப்படையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வந்தவர். அப்படி இருக்கும் பொழுது அவருக்கு எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அவரைப் பற்றி வந்த விமர்சனங்களுக்கு அவர் ரியாக்ஷன் கொடுக்காமல் இருந்தது தான் புத்திசாலித்தனமான விஷயம்" என்று பேசி இருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.