Adhik Ravichandran: வீடு தேடி வந்த சிவாஜி வீட்டு கெளரவம்.. கைமாறியதா 500 கோடி? - விளக்கம் சொல்லும் செய்யாறு பாலு!
அவர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்த காரணத்தினால் மட்டுமே இவ்வளவு தூரம் இந்த விஷயம் பேசப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனின் சினிமா பின்னணி என்ன என்பது குறித்தான தேடல்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
சிவாஜி வீட்டில் நடந்த கல்யாணத்தை பொருத்தவரை, பிரபுவின் மகள் ஐஸ்வர்யா ஒரு தொழிலதிபரையோ அல்லது வேறு யாரையோ திருமணம் செய்திருந்தால் இந்த அளவிற்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்காது.
அவர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்த காரணத்தினால் மட்டுமே இவ்வளவு தூரம் இந்த விஷயம் பேசப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனின் சினிமா பின்னணி என்ன என்பது குறித்தான தேடல்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
பிரபுவின் மகளை அவர் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அவருக்கு 500 கோடி வரதட்சணை கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் கேட்டு தான் கொடுத்திருக்க வேண்டும் என்று இல்லை.. சிவாஜி வீட்டில் இருந்து ஒரு பெண் இந்த வீட்டிற்கு வந்ததே மிகப்பெரிய கௌரவம் தான்.
ஆம் எடுத்துக்காட்டாக தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார். அடுத்து அவர் கமலுக்கோ, ரஜினிக்கோ கதை தயார் செய்து வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் அவர்களை ஒரு சாதரண ஒரு இயக்குனராக அந்த அணுகுவதற்கு ஒரு ஊரையே சுற்றிவர வேண்டும்.
ஆனால் இப்போது அப்படி இல்லை; பிரபுவிடம் சொன்னால் போதும், ரஜினி, கமலுக்கு அவரே போன் செய்து ஆதித் ரவிச்சந்திரன் கதை ஒன்றை வைத்திருக்கிறார். என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக, நீங்கள் படம் செய்ய வேண்டாம். நீங்கள் கதை கேளுங்கள் பிடித்திருந்தால் நடியுங்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கெளரவம் கிடைக்கும்.
அங்கிருந்து கிடைக்கக்கூடிய அந்த கௌரவத்தை ஆதிக் பயன்படுத்துகிறாரோ இல்லையோ ஆனால் பயன்படுத்தினால் ஒன்றும் பெரிய கௌரவ குறைச்சல் கிடையாது” என்று பேசினார்.
டாபிக்ஸ்