Chef Damu: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியது ஏன்? - தாமு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chef Damu: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியது ஏன்? - தாமு பேட்டி!

Chef Damu: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியது ஏன்? - தாமு பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 09, 2023 08:00 PM IST

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கலக்கிய மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணத்தை அந்த நிகழ்ச்சியின் நடுவர் தாமு சொல்லி இருக்கிறார்

மணிமேகலை, தாமு
மணிமேகலை, தாமு

இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளிகாக ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, மௌன ராகம் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன் ஆகிய புதிய கோமாளிகளை அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்; பழைய கோமாளிகளில் குரேஷி, புகழ், மணிமேகலை, கிசுனிதா ஆகிய நான்கு பேர் இருந்தனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்கின்றனர்.

இந்த சீசனையும் வழக்கம் போல் ரக்‌ஷனே தொகுத்து வழங்குகிறார். முதற்கட்ட எலிமினேஷனில் கிஷோர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “ இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனக்கு கொடுத்த வாய்ப்புகளையும் சூழல்களையும் சிறப்பாக கொண்டு வர நான் கூடுதல் முயற்சிகளை எப்போதும் எடுப்பேன். இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறேன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய தாமு, “ அவங்க நல்லா இருக்காங்க; அவருடைய மனநிலை மாறவில்லை; அவர் வெளியேறியது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஒரு வேளை இதை விட பெரிதாக தொகுப்பாளர் விஷயத்தில் கவனம் செலுத்த போகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அவர் போனது எங்களுக்கு மிகப்பெரிய இழப்புதான். குறிப்பாக அவர் இல்லாமல் போனது எனக்கு மிகப்பெரிய வருத்தம். அவருடைய பல காமெடிகளை நான் மிஸ் செய்கிறேன். அவர் எனக்கு மகள் போன்றவர். இருந்தாலும் அவர் எதிர்காலம்தான் முக்கியம்.” என்று பேசியிருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.