Tamil Movies On This Day: விஜயகாந்தின் மறக்க முடியாத நடிப்பு.. ஆகஸ்ட் 26 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்-check out the list of tamil movies got released on this day of august 26 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies On This Day: விஜயகாந்தின் மறக்க முடியாத நடிப்பு.. ஆகஸ்ட் 26 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Tamil Movies On This Day: விஜயகாந்தின் மறக்க முடியாத நடிப்பு.. ஆகஸ்ட் 26 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Aarthi Balaji HT Tamil
Aug 26, 2024 06:53 AM IST

Tamil Movies On This Day: ஆகஸ்ட் 26 ஆம் தேதியில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது.

Tamil Movies On This Day: விஜயகாந்தின் மறக்க முடியாத நடிப்பு.. ஆகஸ்ட் 26 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies On This Day: விஜயகாந்தின் மறக்க முடியாத நடிப்பு.. ஆகஸ்ட் 26 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

என் ஆசை மச்சான்

1994 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் என் ஆசை மச்சான். விஜயகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார். இப்படத்தில் விஜயகாந்த், முரளி, ரஞ்சதா, ராதாரவி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். படமும் பெரிய வெற்றி பெற்றது.

விஜயகாந்த்- ஆறுசாமியாகவும், முரளி - சுப்பிரமணியாகவும், ரேவதி- தாயம்மாவாகவும், மோனிகா- இளைய தாயம்மாவாகவும், ரஞ்சிதா- மீனாட்சியாகவும், கஜன் கான்- மீனாட்சியின் மாமா தங்கராசாகவும், காந்திமதி - காவேரியாகவும், ராதா ரவி - காவல் அதிகாரியாகவும், ஆர். சுந்தர்ராஜன் தளபதி தினேஷ்- தினேஷ் பாலு ஆனந்த்- நாச்சிமுத்து, கோவை செந்தில், நெல்லை சிவா என பலரும் இப்படத்தில் நடித்துள்னர்.

பெற்றோரை இழந்த நிலையில், சிறுவனான ஆறுசாமி, பிறந்த குழந்தையாக இருக்கும் தன் தம்பி சுப்பிரமணியை வளர்ப்பதும், சிறு வயதிலிருந்தே ஆறுசாமியின் முறைப்பெண்ணாக வளரும் தாயம்மா, அந்த குடும்பத்தை தாங்கி ஆளாக்குவது தான் கதை. திருமணம் ஆகாமல் ஒரு குடும்பத்தின் மூத்தவனும், அவனை மணக்கவிருக்கும் பெண்ணும் தன் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆசையை நிறைவேற்ற தங்களை தியாகம் செய்வதும், தன் பாசத்திற்குரியவரின் காதலை சேர்த்து வைப்பதும் என கதைக்களம் இருக்கும். இதே நாளில் இப்படம் வெளியானது.

கில்லாடி மாப்பிள்ளை

கில்லாடி மாப்பிள்ளை திரைப்படம், 1994 ஆம் ஆண்டு வெளியானது. நகைச்சுவைத் திரைப்படமான இதில், பாண்டியராஜன் , சிந்துஜா, திவ்யஸ்ரீ, வெண்ணிற ஆடை மூர்த்தி , சிஆர் சரஸ்வதி , எஸ்எஸ் சந்திரன் , வடிவேலு , ஜெயலலிதா , சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து உள்ளனர்.

தமிழில் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தெலுங்கில் ஜெயம்மு நிச்சயம்மு ரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழை போலவே தெலுங்கு ரீமேக்கிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

மீண்டும் ஒரு காதல் கதை

வினோத் (அறிமுக நடிகர் வால்டர் பிலிப்ஸ் நடித்தார்) ஒரு இந்து முஸ்லீம் பெண்ணான ஆயிஷாவை (இஷா தல்வார்) காதலிக்கிறார். மீண்டும், இது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில், ரோமியோ ஜூலியட் காலத்திலிருந்தே, சண்டையிடும் குடும்பங்களைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அல்லது வெவ்வேறு மதங்கள்-சாதிகள்-சமத்துவமற்ற பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட இரு இளைஞர்கள் காதலிப்பதைப் பார்த்திருக்கிறோம். சில அழிந்தன, சில இல்லை. ஷேக்ஸ்பியர் காதலர்கள் அழிந்தனர்.

மீண்டும் ஒரு காதல் கதை படம் மலையாளத்தில் ரீமேக்காக வெளியாகி வெற்றி வெற்றது. இதே நாளில் 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படம் வெளியானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.