லப்பர் பந்து நடிகை சுவாசிகா மீது வழக்குப்பதிவு! அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு!
நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை கூறியதாக லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலையாளத் திரை உலகில் நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து நடத்தப்பட்ட ஹேமா கமிட்டியை தொடர்ந்து மலையாள திரை உலகில் பல சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இதில் பல முக்கிய நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான எடவேல பாபு, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து புகார் அளித்த நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை கூறியதாக லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி,நடிகர் மனோஜ் ஆகியோர் மீது புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஹேமா கமிட்டி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யபபட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாலியா வன்கொடுமை பிரபல மலையாள நடிகர் ஒருவரின் திட்டமிடலால் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த நடிகர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு பின்னர் அந்த நடிகை அளித்த புகாரின் பெயரில் கேரள அரசு சார்பாக ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. கேரளா திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்கள் சேர்ந்து பவர் குருப் ஒன்றை வைத்து உள்ளதாகவும், அவர்களின் உத்தரவை மறுக்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனைக் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. தற்போது தான் இந்த அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின் படி கேரளா திரையுலகில் பவர் குருப் ஒன்று இருப்பது உண்மை எனவும் தெரியவந்தது. மேலும் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.