Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு..மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையமும் கோரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், "நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். "என்று பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சென்னையில் இன்று (நவ.21) நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்