Captain Miller Box Office: அம்மாடியோ.. கலவையான விமர்சனங்கள் வந்தாலும்..10 நாட்களில் வசூலில் குறையாத கேப்டன் மில்லர்!
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் 10 நாள் வசூல் குறித்த விவரத்தை பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. அருண் மாதேஷ்வரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் ஷவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்பட பலரும் நடித்து உள்ளார்கள். படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
பேன் இந்தியா படமாக உருவாகியிருந்தாலும், கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாகவில்லை. சங்கராந்தியை முன்னிட்டு ஹனுமன், குண்டூர் காரம், சைந்தவ், நா சாமி ராக என தெலுங்கில் நான்கு படங்கள் வெளியான காரணத்தால் பிற மொழி படங்களை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு நிலவிய நிலையில் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழ் உள்பட ரிலீசான பிற மொழிகளில் கேப்டன் மில்லர் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
பொங்கலுக்கு ரிலீஸான படங்களில் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ரூ. 100 கோடியை நெருங்கி உள்ளது.
படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் உலகளவில் ரூ. 70 கோடி வரை வசூல் செய்து உள்ளது. இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 90.39 கோடி வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.
விரைவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் நிலையில் முதல் நாள் ரூ. 16.29 கோடி, இரண்டாவது நாள் ரூ. 14.18 கோடி, மூன்றாவது நாள் ரூ. 15.65 கோடி, நான்காவது நாள் ரூ. 13.51 கோடி, ஐந்தாவது நாள் ரூ. 12.24 கோடி, ஆறாவது நாள் ரூ. 9.33 கோடி, ஏழாவது நாள் ரூ. 4.92 கோடி, எட்டாவது நாள் ரூ. 4.27 கோடி என வசூலித்து உள்ளது.
என்ன தான் படம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் எந்த குறைவும் இல்லாமல் 10 நாளில் ரூ.100 கோடி நெருங்குகிறது.
கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆசியன் சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன் இணைந்து படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது. இதனால் படத்தின் வசூல் வரும் வாரத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு தமிழை விட குறைவான நீளம் கொண்டதாக உள்ளது. படத்தின் தமிழ் பதிப்பு 2 மணி நேரம் 37 நிமிடங்கள் இருந்து வரும் நிலையில், தெலுங்கு பதிப்பு 2 மணி நேரம் 29 நிமடங்கள் உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1930 களில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் படம் உருவாகியுள்ளது. தனது மக்களுக்கு எதிராக நிகழும் கொடூரமான குற்றங்களில் இருந்து காப்பாற்ற புரட்சிகாரனமாக ஹீரோ மாறுவதே படத்தின் ஒன்லைன்.
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்