“தலைவன் எங்கிருந்தும்..ரசிகர்களை முட்டாளாக்க கூடாது.. சூர்யா கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்” - போஸ் வெங்கட்!
நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட வேண்டும். எல்லாவற்றையும் மீறி உங்களுக்கு அறிவு கொடுத்து விட வேண்டும், படிப்பு கொடுத்து விட வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும். - போஸ் வெங்கட்!
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போஸ் வெங்கட், “இயக்குநர் சிறுத்தை சிவா, நான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை நீங்கள் என்னுடைய ஒரு படத்தில் நடித்து விட்டீர்கள் என்றால், அதன் பின்னர் நீங்கள் பொருளாதார ரீதியாக, மரியாதை ரீதியாக, அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள் என்று சொன்னார். அதை எனக்கு இந்த படத்தில் அவர் செய்து கொடுத்திருக்கிறார். சிவா சார் செட்டிலும், வெற்றிமாறன் செட்டிலும்தான் அசிஸ்டன்ட்டை டைரக்டரை பேர் சொல்லி கூப்பிடுவதில்லை. காரணம் அவர்கள் முந்தைய நாளிலேயே அனைத்தையும் திட்டமிட்டு விடுவார்கள்.
சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்
நான் இந்த இடத்தில் அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன். ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு நடிகர் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். எப்படி வழி நடத்த வேண்டும் என்றால், சூர்யா போன்று வழி நடத்த வேண்டும். தர்மம் செய்ய இப்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். மக்களுடைய பிரச்சினையை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை தற்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட வேண்டும். எல்லாவற்றையும் மீறி உங்களுக்கு அறிவு கொடுத்து விட வேண்டும், படிப்பு கொடுத்து விட வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும்.
ஒரு தலைவன் எங்கிருந்து வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்; அவன் நடிகனாக இருக்கலாம்; ஐஏஎஸாக இருக்கலாம் எழுத்தாளராக இருக்கலாம்; பேச்சாளராக இருக்கலாம். ஆனால் தலைவனுடைய அடிப்படை அவனுடைய ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது. அவனை அறிவாளியாக வைக்க வேண்டும். அவனைப் படிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும்; ஆகையால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்