Bluesattai Maran: பத்த வச்சிட்டீங்களே ப்ளூசட்டை..! "பாலாவும், பாலய்யாவும்" - இந்த டெட்லி காம்போ எப்படி இருக்கும்?
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யாவை, ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படுவராகவே இருந்து வருகிறார். இவரும் பாலாவும் இணைந்தால் படத்தில் என்ன நடக்கும் என்பதை ப்ளூசட்டை மாறன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பாலா படங்களில் எப்போதும் ஏதாவதொரு சர்ச்சை வருவது இயல்பான விஷயம்தான். அந்த வகையில் பாலா தற்போது இயக்கி வரும் வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடித்து வந்த நிலையில், பின்னர் பாதியிலியே அவர் விலகினார்.
இதைத்தொடர்ந்து அருண்விஜய்யை வைத்து பாலா படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டான நடிகை மமீதா அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார்.
இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாவில் விளக்கம் அளித்த மமீதா, "நான் நடித்த வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.
நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்துக்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.
அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார். அந்தப் படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
நான் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான்" என்று விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் கோலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாகவும், ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் பாலய்யா, இயக்குநர் பாலா ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ப்ளூசட்டை மாறன்.
அப்படி அவர்கள் இருவரும் இணையும் படத்தில் செட்டில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடித்துக்கொள்வார்கள் என நக்கலடித்துள்ளார்.
இவரது இந்த பதிவுக்கு ரசிகர்களும் கிண்டலடிக்கும் விதமாக கமெண்ட்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்