Blue Sattai Maran: ‘பல்லு படாம பாத்துக்க’ படத்த எடுத்த ஞான ஈட்டி நீங்கதானே?- ஞானவேல் ராஜாவை வறுத்த ப்ளூ சட்டை மாறன்!
ஐயா ஞான ஈட்டி அவர்களே.. ஒரு சமயத்துல நீங்க தயாரிச்ச படமெல்லாம் ஊத்திக்கிட்டப்ப... வேற வழி இல்லாம இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்? இந்த மாதிரி கொச்சையான டைட்டில்கள் தமிழ் சினிமா வரலாற்றுல வந்ததே இல்ல.
பருத்திவீரன் படத்தை இயக்கியபோது படத்தை சொன்னதேதியில் இயக்குநர் அமீர் முடித்துக்கொடுக்கவில்லை எனவும், தவறான கணக்கு காட்டினார் எனவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அந்த பேட்டியில், அமீர் நேர்மையானவராக இருப்பவராயின் அவருடன் ஏன் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தொடர்ந்து வேலை செய்ய வில்லை; காரணம், அவருடன் யாரும் பயணிக்க முடியாது.” என்று பேசினார்.
இதனையடுத்து அப்படத்தில் பணியாற்றிய சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல்ராஜாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலும், அறிக்கை வெளியிட்டனர்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை உருவெடுத்தது. இந்த நிலையில், இது குறித்து பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஞானவேல் ராஜாவுக்கும், சிவகுமார் குடும்பத்திற்கும் கேள்வி எழுப்பும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “நேர்மையானவர் என்றால் அமீர் ஏன் நிறைய படங்களை இயக்கவில்லை? அவரை வைத்து ஏன் யாரும் படம் தயாரிக்கவில்லை? - ஞான ஈட்டி.
ஐயா ஞான ஈட்டி அவர்களே.. ஒரு சமயத்துல நீங்க தயாரிச்ச படமெல்லாம் ஊத்திக்கிட்டப்ப... வேற வழி இல்லாம இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்? இந்த மாதிரி கொச்சையான டைட்டில்கள் தமிழ் சினிமா வரலாற்றுல வந்ததே இல்ல.
இப்படியெல்லாம் படம் தயாரிச்சி, இயக்கனும்னு அமீர் நெனைக்கல. அதான் நிறைய படம் பண்ணல.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்