Dhanush: பாசத்திற்காக தனுஷ் இழைத்த துரோகம்.. டாட்டா காட்டிய அனிருத்.. ஜிவி காட்டிய காட்டம்.. வெற்றிமாறன் செய்த சமசரம்!
அந்த இடத்தில் அவர் சிவகார்த்திகேயன் அப்படி அவரிடம் நடந்து கொள்ளவில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிட்டதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை தனுஷ் பேசியது முற்றிலுமே பொய்யான விஷயம்தான்
கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில், தனுஷ் ஜிவி பிரகாஷ் குமார்தான் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் எல்லா காலகட்டத்திலும் அவர் என்னுடன் நின்று இருக்கிறார் என்றும் பேசினார்.
அந்த இடத்தில் அவர் சிவகார்த்திகேயன் அப்படி அவரிடம் நடந்து கொள்ளவில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிட்டதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை தனுஷ் பேசியது முற்றிலுமே பொய்யான விஷயம்தான்.
காரணம் என்னவென்றால், ஜிவி பிரகாஷூக்கும் தனுசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இருவரும் நண்பர்களாக இருந்தது உண்மைதான். ஒரு கட்டத்தில் அனிருத்தை பிரமோட் செய்வதற்காக, ஜிவி பிரகாஷிற்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் தனுஷ் கெடுக்க ஆரம்பித்தார். இது ஜிவிக்கு கோபத்தை உண்டாக்கியது. இதை அவர் தன்னுடைய ட்விட்டர் தளத்திலேயே மிகவும் ஓப்பனாக பதிவிட்டிருந்தார்.
இதில் இன்னொரு சம்பவமும் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டைம்ஸ் ஆப் இந்தியா அந்த வருடத்தின் மிகச் சிறந்த நடிகர் விஜய் என்று சொல்லி விருது கொடுத்து, அவரிடம் பேட்டி எடுக்க முயன்றது. ஆனால் அவர்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் அவர்கள் ஜிவியை தொடர்பு கொண்டு விஜயை அணுக உதவி செய்யுமாறு கேட்கிறார்கள். கொஞ்சம் காலம் முயற்சி செய்து பார்த்த அவர் முடியாத பட்சத்தில், நீங்களே நேரடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லிவிட்டார். விஜய் இல்லை என்று ஆனவுடன் அந்த விருதை அவர்கள் தனுஷிற்கு கொடுத்து, அவரது பேட்டியை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பதிவிட்டார்கள்.
இதனைப் பார்த்த ஜிவி பிரகாஷ் குமார் நேற்று வரை விஜய் தான் சிறந்த நடிகர் என்று சொல்லி, அவரை அணுகுவதற்கு என்னிடம் உதவி கேட்டு விட்டு, இப்போது தனுஷிற்கு கொடுத்திருக்கிறீர்களே என்று தனுஷை தாக்கி பதிவு ஒன்றை வெளிப்படுத்தி இருந்தார். இப்படியான ஒரு மோதல் போக்கு அவர்கள் இருவருக்குள்ளும் இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷை அனி கைவிட வேறு வழியில்லாமல் தனுசு ஜிவியிடம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து வெற்றிமாறன் மூலம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மீண்டும் இருவரும் ஒன்றாக ஆனார்கள். ” என்று பேசினார்.
டாபிக்ஸ்