Oscar 2024: 22 வயதில் இரண்டு ஆஸ்கர் விருதுகள்! 87 வருட சாதனையை முறியடித்த பார்பி பட பாடகி
22 வயதிலேயே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 87 வருட ஆஸ்கர் திரைப்பட விருதுகள் சாதனையை முறியடித்துள்ளார் ஹாலிவுட் பாடகரான பில்லி எலிஷ்.
ஆஸ்கர் விருதை வென்றிருக்கும் பிரபல பாடகர்களும், உடன்பிறப்புகளுமான பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கோனெல் வரலாறு படைத்துள்ளனர். மிக இளம் வயதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை இரண்டு முறை வென்றிருக்கும் இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வாட் வாஸ் ஐ மேட் ஃபார் என்ற பாடலுக்காக பில்லி எலிஷ்க்கு, சிறந்த ஒரிஜினல் பாடல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடல் கடந்த ஆண்டில் வெளியான பார்பி என்ற காமெடி படத்தில் இடம்பிடித்திருந்தது. இதையடுத்து விருது வென்ற பாடலை ஆஸ்கர் மேடையில் வைத்து பாடவும் செய்தார் பில்லி எலிஷ்.
வரலாறு படைத்த பில்லி எலிஷ்
மிகவும் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலியாகவும், கௌரவம் பெற்றதாகவும் உணர்கிறேன். இந்த படத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்றடைகிறது. இது எவ்வளவு நம்பமுடியாத விஷயமாக உள்ளது." என்ற உணர்ச்சி பொங்க பேசினார்.
இதற்கு முன்னதாக 2021இல், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான நோ டை டூ டை படத்துக்காக சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ஆஸ்கர் விருதை இந்த உடன்பிறப்புகள் வென்றார்கள்.
இதன் மூலம் 22 வயதாகும் பாடகியான பில்லி, 87 வருட ஆஸ்கர் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக பழம்பெரும் நடிகையான லூயிஸ் ரெய்னர், 28 வயதில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தார். அவர், 1936 1937 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு முறை சிறந்த நடிகை ஆஸ்கர் விருதை வென்றார்.
இதைத்தொடர்ந்து தற்போது 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்கர் வென்று மிகவும் இளம் வயதில் இந்த விருதை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பில்லி எலிஷ்.
பார்பி படத்தில் இடம்பிடித்த வாட் வாஸ் ஐ மேட் ஃபார், ஐ ஏம் ஜஸ்ட் கென் ஆகிய பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் பில்லி எலிஷின் வாட் வாஸ் ஐ மேட் ஃபார் பாடல் விருதை வென்றிருக்கிறது.
பில்லி எலிஷ்க்கு ஒலித்த பலத்த கைதட்டல்கள்
விருது பெறுவதற்கு முன்னர், ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பாடலை பெர்பார்ம் செய்தார் பில்லி எலிஷ். அந்த பாடல் முடிந்த பிறகு பலத்த கரகோஷங்களும், கைதட்டல்களும் எழுந்தன.
இந்த பாடல் ஏற்கனவே கடந்த ஆண்டில் கிராமி விருதை வென்றது. இசை உலகின் ஆஸ்கர் விருதாக கிராமி விருதுகளை பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆண்டின் பிரபலமான பாடலாகவும் இது மாறியுள்ளது.
விருதுகளை அள்ளிய பில்லி எலிஷ் உடன்பிறப்புகள்
ஆஸ்கர் விருது மட்டுமில்லாமல் புகழ் பெற்ற விருதுகளான கிராமி, கோல்டன் குளோப் விருதுகளையும் இந்த பில்லி எலிஷ் உடன்பிறப்புகள் வென்றுள்ளனர். அத்துடன் வாட் வாஸ் ஐ மேட் ஃபார் பாடலுக்காக அவர்கள் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் சங்கம் விருதையும் வென்றனர். இதுவரை இந்த பாடல் 633 மில்லியன் முறை ஸ்டீரிம் செய்யப்பட்டிருக்கிறது.
பார்பி திரைப்படம்
கடந்த ஆண்டில் வெளியாகி வசூலிலும் பட்டையை கிளப்பிய பேண்டஸி காமெடி ஹாலிவுட் படமான பார்பி, 2023இல் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டிய படமாக உள்ளது. எட்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த படம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்