தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Biggbosstamil Manichandra Latest Interview About Bigboss Show After Vijay Tv Bigboss Season 7

Bigg Boss 7 Tamil: ‘பிரதீப்தான் ஸ்ட்ராங்கான போட்டியாளர்.. நமக்கு எப்பவுமே தளபதிதான்’ - பிக்பாஸ் மணி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2024 01:02 PM IST

பிக் பாஸ் வீட்டை பொருத்தவரை நான் கற்றுக் கொண்ட விஷயம் என்று சொன்னால், எந்த இடத்தில் நாம் குரல் கொடுக்க வேண்டுமோ,அந்த இடத்தில் நிச்சயமாக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ பிக் பாஸ் வீட்டை பொருத்தவரை உண்மையாக இருந்தவர்கள் யார் யார் என்று நீங்கள் என்னை கேட்டீர்கள் என்றால், அந்த பட்டியலில் தினேஷ், கூல் சுரேஷ் விஷ்ணு மற்றும் ரவீனா ஆகியோர் இருக்கிறார்கள். 

பிக் பாஸ் வீட்டை பொருத்தவரை நான் கற்றுக் கொண்ட விஷயம் என்று சொன்னால், எந்த இடத்தில் நாம் குரல் கொடுக்க வேண்டுமோ,அந்த இடத்தில் நிச்சயமாக நாம் குரல் கொடுக்க வேண்டும். 

வெளியே இருக்கும் சிலர் நான் அமைதியாக இருந்ததுதான் என்னுடைய மிகப்பெரிய பலம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், சில இடங்களில் நாம் நம்முடைய குரலை வெளிப்படுத்தியாக வேண்டும் என்பது என்னுடைய கருத்து!இன்னொரு விஷயம் நான் நன்றாக சமைக்க கற்றுக் கொண்டேன்

சிலர் என்னிடம் எப்படி இப்படி பாசிட்டிவாக இருக்கிறீர்கள் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் எனக்கு நடிக்க தெரியாது; எனக்கு சண்டை போடுவது பெரிதாக பிடிக்காது. அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக வலிமையான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். அவருக்கு அடுத்தபடியாக வலிமையான போட்டியாளர் என்றால், அது தினேஷ் ப்ரோதான். அவர் இறுதி கட்டம் வரை வருவார் என்று பார்த்தேன். 

எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிடித்தமான போட்டியாளர் என்றால் அது கூல் சுரேஷ்தான். கூல் சுரேஷ் மாதிரிதான் நான் விளையாட வேண்டும் என்று உள்ளே வந்தேன். ஆனால் அங்கு என்னுடைய கேம் வேறு மாதிரியாக மாறிவிட்டது. எனக்கு தளபதி விஜய் சார் என்றால் மிகவும் பிடிக்கும். என்ன காரணம் தெரியவில்லை. சிறு வயதில் இருந்தே  தளபதி விஜய் மீது இருந்த அபிப்ராயம் அப்படியே என்னுள் ஊறிவிட்டது” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.