BiggBoss 7 Tamil: ‘கூல் சுரேஷ் மீது கொலைவெறியில் என் குடும்பம்.. பிரதீப் தப்பானவன் இல்ல’ பிராவோ பேட்டி!
RJ Bravo Interview: ‘கூல் சுரேஷ், வெளியில் என்னைப் பற்றி நிறைய போட்டு கொடுத்திருக்கிறார் என்பது. அவர் நிறைய பதனி வேலை பார்த்திருக்கிறார்’
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட RJ பிராவோ, கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இதோ:
‘‘என்னுடைய பிக்பாஸ் அனுபவம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் வரை நான் எந்த தயாரிப்பும் செய்யவில்லை. உள்ளே இருக்கும் பலருக்கும், வெளியில் இருப்பவர்களின் குணங்கள் இருந்தது. மூட்டி விடுவது, சகுனித்தனம், சண்டை போடுவது, சண்டை போட்டுவிட்டு பாய்ண்ட் போதுவது ஆகிய குணங்கள் இருக்கு. நம்மை மக்கள் பார்க்கிறார்கள், சுற்றி கேமரா இருக்கு என்பது தான் இதற்கு காரணம்.
- நான் சொல்வது தான் சரி, என்பதை அதனால் தான் உறுதி செய்ய நினைக்கிறார்கள். ஒரு விளையாட்டுக்காக நம்மை மாற்றிக் கொள்ள கூடாது. அப்படி தான் நான் உள்ளே சென்றேன். இவனை நம்பலாம் என்கிற இடத்தில் இருக்கலாம் என்று நினைத்தேன். இது எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அனன்யா ரீ எண்ட்ரி ஆகி சிலருக்கு டேக் கொடுத்தார். அதை என்னுடைய பார்வையில் பார்த்தால்..
- நரி-தினேஷ் தான். அவர் வெளியில் இருந்து முழு பலத்தோடு வந்துள்ளார். எதற்கு கை தட்டல் கிடைக்கும் , எதற்கு பாராட்டு கிடைக்கும் என்கிற தந்திரத்தோடு விளையாடுகிறார்.
- சத்தமில்லாத விசில்- கூல் சுரேஷ் தான். எங்கம்மா அவர் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். என்னைப் பற்றி பின்னால் பேசுவதை அம்மா பார்த்திருக்கிறார். அவர் தான் நாமினேட் பண்ணியுள்ளார். அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார். சண்டைகளுக்கு மத்தியில் அவர் சிறிதாக ஒரு விசயத்தை செய்து செல்வார்.
- விக்ரம்: இப்போது தான் தலை தூக்குகிறார். மிக்சர் சாப்பிடுவதை விட ஏதாவது செய்வார் என்று நினைக்கிறேன். அவர் நினைத்த மாதிரி டைட்டில் வின்னர் ஆவார் என்று நினைக்கிறேன்.
- பப்பட்: விசித்திராவிடம் அர்ச்சனா சிறிது நாள் அப்படி தான் மாட்டிக் கொண்டிருந்தார். விசித்திரா நினைத்ததை தான் அர்ச்சனா செய்தார். ஆனால், உண்மையில் அர்ச்சனா வெகுளியான பொண்ணு.
- இந்த கொசு தொல்லை- ரவீனா தான். ரவீனா அமைதியா சில பேரை ஆதரிப்பாங்க. ஆனால், அது வெளியில் தெரியாது.
- சொம்பு- மாயா-பூர்ணிமா உள்ள ஒரு உரையாடல் இருக்கு. அவர்கள் மியூச்சூவல் சொம்பு என்று கூறலாம்.
- தவளை-பூர்ணிமா தான். நிறைய நேரம் எளிதில் முடிக்க வேண்டிய பேச்சு வார்த்தையை, பெரிதாக்கி, அதுவே அவருக்கு எதிராக வந்து நிற்கும்.
- விஷ பாட்டில்- மணி தான்
- தேள்- இந்த விளையாட்டை புத்திசாலித்தனமாக விளையாடுவது விசித்ரா தான். அவங்க அழகாக திட்டமிட்டு விளையாடுகிறார். அவரே அவரை டேமேஜ் செய்து கொள்வார்.
- க்ரின்ச்- நிக்சனுக்கு தான் கொடுக்க வேண்டும். ஐஸூ உடன் இருந்த போது அவன் வழங்கிய அறிவுரைகள் அதிகம். சில சம்பவங்களுக்காக அவன் தான் க்ரின்ச். ஒரு சில விசயங்களை அவன் செய்யாமல் இருந்திருக்கலாம்.
கூல் சுரேஷ் ஒரு பதனி தான்!
வெளியில் வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, கூல் சுரேஷ், வெளியில் என்னைப் பற்றி நிறைய போட்டு கொடுத்திருக்கிறார் என்பது. அவர் நிறைய பதனி வேலை பார்த்திருக்கிறார். மாயா, பூர்ணிமா என் மீது குற்றச்சாட்டு வைத்த போது, நான் அமைதியாக இருந்தது தவறு என்பது வெளியில் வந்த பிறகு தான் தெரிந்தது. நான் ஏதாவது பேசியிருக்க வேண்டும். அவர்கள் வைத்த குற்றச்சாட்டு பற்றி நான் பேசினால், என்னைப் பற்றி தவறான எண்ணம் வந்துவிடுமோ என்று தான் நான் பேசில்லை. ஆனால், அது தவறு தான். நான் அதை கேட்டிருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து பிரதீப் நல்லவன்!
ரெட் கார்டு தூக்கிய விசயத்தில் நடந்ததை கூற வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒருத்தரை தூக்க வேண்டும். விசித்ரா அந்த விசயத்தில் பயங்கர புத்திசாலியாக இருந்தார். அந்த விவகாரத்தில் மாயா டீமிடம் பாய்ண்ட் இருந்தது. ஆனால், கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்று, டோட்டல் டேமேஜ் ஆகிட்டாங்க. பிரதீப்பை நான் தவறாக பார்க்கவில்லை. ஒருவாரம் தான் எனக்கு பிரதீப் தெரியும். என் கண் முன் அவன் யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை.
மாயா டீம் அப்செட்!
இத்தனை கேமரா இருக்கு, யாரும் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் நான் ரெட் கார்டு தூக்கினேன். பூர்ணிமாவிடம் ஒரு நாள் கேட்டேன், ‘ப்ரதீப்னால உங்களுக்கு ஏதாவது நடந்ததா?’ என்று. பூர்ணிமா ஒன்றிரண்டு விசயங்களை சொன்னார்.
மூன்றாவது வாரம், ஐஸூ ஒன்று சொன்னார், அது வெளியில் எப்படி பார்த்தார்கள் என்று தெரியாது. அந்த வாரத்தில் இருந்து, அவர்களுக்கு வெளியில் பெரிய ரெஸ்பான்ஸ் வராமல் அனைவரும் கவலையில் இருந்தார்கள்,’’
என்று பிராவோ அந்த பேட்டியில் கூறியுள்ளார்.