வாயை கொடுத்து மாட்டிய சாச்சனா.. ஆப்பு வைத்து போட்டியாளர்கள்! - முதல் ஆளாக எலிமினேட் ஆனதற்கான காரணம் என்ன?
பிக்பாஸ் வீட்டில் இருந்து சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது.

வாயை கொடுத்து மாட்டிய சாச்சனா.. ஆப்பு வைத்து போட்டியாளர்கள்! - முதல் ஆளாக எலிமினேட் ஆனதற்கான காரணம் என்ன?
ஆண்கள் Vs பெண்கள் என்பது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை நாதம் என்பதை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடனேயே போட்டியாளர்களிடம் நெற்றிப்பொட்டில் அடித்தவாறு சொல்லிவிட்டார். அதை வைத்தே ஆட்டத்தையும் ஆரம்பித்த அவர், வீட்டின் நடுவில் இருக்கும் கோட்டை சுட்டிக்காட்டி, வீடு இரண்டாக பிரிந்திருப்பதை போட்டியாளர்களை கவனிக்க சொன்னார்.
யாருக்கு எந்தப்பக்கம்?
தொடர்ந்து, யாருக்கு எந்தப்பக்கம் வேண்டும் என்பதை போட்டியாளர்களையே கலந்து யோசித்து முடிவெடுக்கச் சொல்ல, முட்டி மோதிய போட்டியாளர்கள் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர்.