Biggboss Azeem Interview : ‘மிஞ்ச ஆளே இல்ல’ அசீம் வேற லெவல் பேட்டி!
Azeem: ‘‘பெற்றோர் மனதை ஜாலியாக வைத்திருந்தால், நமது வாழ்க்கை தானாக வேறு லெவலுக்கு போகும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது,’’ -அசீம் பேட்டி!
பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் சீசன் 6 தமிழ் வெற்றியாளருமான அசீம், தொடக்கத்தில் ஒரு இசை தொலைக்காட்சியின் தொகுப்பாளர். ஊடகவியலாளர் , தொகுப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட அசீம், சமீபமாக அதிகம் பேசப்பட்ட பிரபலம். நேற்று தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார் அசீம். அவர் பற்றி பல விமர்சனங்கள் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இருந்திருக்கிறது. அதற்கு காரணம், அவரது பேச்சு என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதே அசீம், ஒரு ஆண்டுக்கு முன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதை கேளுங்கள்:
‘‘2011 ல் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக என் பயணத்தை தொடங்கினேன். சன் மியூசிக்கில் நிறைய பேரை இன்டர்வியூ செய்திருக்கிறேன். பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு நடிகராகும் ஆசை இருந்தது.
ப்ரியமானவள் சீரியல் தான் எனக்கு பெரிய பேரை பெற்றுத்தந்தது. ஒவ்வொருவருக்கும் ஒருவர் ஈர்ப்பாளராக இருப்பார். எனக்கு சிறு வயதிலிருந்தே தலைவர் ரஜினி தான் ஈர்ப்பாளர். அதுக்குப் பின், நடிப்புக்கு கமல் சார் தான். நடிப்புக்கு அவரை மிஞ்ச தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆள் இல்லை. அவரிடம் இருந்து தான் ரொமான்ஸ் கற்றுக்கொண்டேன்.
ரசிகர்கள் எனக்கு அளவுக்கு அதிகமாக அன்பு கொடுத்துள்ளனர். அதே அன்பை அனைவரும் அவர்களின் பெற்றோரிடத்தில் கொடுக்க வேண்டும். நமக்கு தீஙகு நினைக்காத ஒரே ஜீவன், தாயும், தந்தையும் தான்.
அவர்களுக்கு எப்போதும் நாம் உண்மையாக இருக்க வேண்டும். அவர்களை நாம் எப்போதும் நேசிக்க வேண்டும். பெற்றோர் மனதை ஜாலியாக வைத்திருந்தால், நமது வாழ்க்கை தானாக வேறு லெவலுக்கு போகும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது,’’
என்று அசீம் பேட்டியில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்