தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss Tamil Pavani Reddy Latest Interview About Ex Husband Pradeep Kumar Death Kollywood News Tamil

Pavani Reddy: ‘என்னைய கொலைகாரின்னு.. தனியா போய் அழுவேன்.. அமீரையும் அந்த மாதிரி..’ - முன்னாள் கணவர் குறித்து பாவனி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 16, 2024 06:37 AM IST

இன்றும் நான் என்னுடைய முன்னாள் கணவரின் குடும்பத்தோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கும் என் மீது மரியாதை இருக்கிறது. நான் தற்போது ஒரு புது வாழ்க்கையை வாழ தொடங்குகிறேன் என்பதை கூட அவர்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

பாவனி
பாவனி

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “என்னை பொருத்தவரை என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகமான அன்பை கொடுப்பேன். அது எந்த அளவுக்கு என்றால், அந்த அன்பில் என்னையே மறந்து விடுவேன்.

அதாவது என்னை விட அந்த நபரை நான் அதிகமாக அன்பு செய்வேன். ஒரு இடத்திற்கு சென்றால் நாம், நமக்கு இது பிடிக்கும் இதை எடுத்துக் கொள்ளலாம். அது பிடிக்கும் அதையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைப்போம்.

நான் ஒரு நபரை காதலிக்கிறேன் என்றால், நான் அந்த இடத்தில் அவருக்கு இது பிடிக்கும். அவருக்கு இதை எடுத்தால் சரியாக இருக்கும் என்று யோசிப்பேன். அப்படியான ஒரு ஆழமான மனநிலையில் நாம் இருக்கும் பொழுது, அவர்கள் திடீரென்று நம்மை விட்டு பிரிந்து சென்றால், எந்த அளவுக்கு மனம் புண்படும் என்று நினைத்துப் பாருங்கள். 

சில பேர் மிகவும் எளிதாக நம்முடைய வாழ்க்கையை பெற்றி கமெண்ட் அடித்து சென்று விடுகிறார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து பார்த்தால்தான் உங்களுக்கு அதனுடைய வலி தெரியும். நீங்கள் நினைக்கிறீர்கள் அது ஒரு கமெண்ட் தானே என்று…ஆனால் உண்மையில் அது மனதை மிகவும் புண்படுத்தும்.

என்னுடைய முன்னாள் கணவர் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு, நான் தான் அவரை கொலை செய்தேன் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். ஆனால் அதற்கான விளக்கத்தை நான் என்றுமே கொடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. காரணம் என்னவென்றால் அது கடந்து சென்று விடும் என்று எனக்கு தெரியும்.

இன்றும் நான் என்னுடைய முன்னாள் கணவரின் குடும்பத்தோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கும் என் மீது மரியாதை இருக்கிறது. நான் தற்போது ஒரு புது வாழ்க்கையை வாழ தொடங்குகிறேன் என்பதை கூட அவர்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

இப்போது நான் அமீருடன் இருக்கும் பொழுது கூட அடுத்ததாக அமீரை கொலை செய்யப் போகிறீர்களா என்று கேட்கிறார்கள். உண்மையில் நான் கேட்கிறேன்…உங்களுக்கு என்ன தெரியும் என்னுடைய முன்னாள் கணவரும், நானும் எத்தனை வருடங்கள் காதலித்தோம், என்ன மாதிரியான அன்பை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டோம் என்பது பற்றி.... இது போன்ற விஷயங்களை நான் பேசும் பொழுது எனக்கு அழுகை வந்துவிடும். பொதுவெளியில் நான் அழாமல் இருக்கலாம். 

ஆனால் தனியாக சென்று அழுதுவிட்டு தான் வருவேன். ஆனால் எனக்கு கடவுள் அதிகமான தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறார். அதனால் நான் அழும் பொழுது என்னுடைய மனம், இப்பொழுது நன்றாக அழுதுகொள். அடுத்த நொடி நீ வெளியே செல்லும் பொழுது, நீதான் உனக்கு ராணி… அதனால் தைரியமாக செல் என்று சொல்லும்.

உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்காக, உங்களது விஷயங்களை பகிர்ந்து கொள்ள நிச்சயமாக ஒருவர் வேண்டும் அது ஆணாக இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். என்னுடைய நண்பர்கள் பலர் தனியாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அழுது கொண்டே இருப்பார்கள். அவர்களிலிருந்து வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தை நான் தனியாக இருக்கிறேன் என்பதுதான்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்