Abishek Raaja Marriage: மனைவியான காதலி! பிக் பாஸ் புகழ் அபிஷேக் ராஜா இரண்டாவது திருமணம்
யூடியூப் விமர்சகர், பிரபல ஆன்லைன் இணையதளங்களில் தொகுப்பாளராக இருந்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

பிக் பாஸ் புகழ் அபிஷேக் ராஜா இரண்டாவது திருமணம்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் அபிஷேக் ராஜா. அந்த சீசனில் 35 நாள்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த அவர், பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். அந்த சீசனில் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம், சண்டையில் ஈடுபடும் சர்ச்சைக்குரிய நபராகவும், மற்றவர்களுக்கு கடினமான போட்டியாளராகவும் அவர் இருந்துள்ளார்.
இதையடுத்து அதே சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 48வது நாளில் மீண்டும் நுழைந்த அபிஷேக் 63வது நாளில் வெளியேற்றப்பட்டார்.
அபிஷேக் ராஜா இரண்டாவது திருமணம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் யூடியூப் விமர்சகராகவும், பிரபல ஆன்லைன் இணையத்தளங்களில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார் அபிஷேக் ராஜா. இதையடுத்து ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவரான அபிஷேக், ஸ்வாதி நாகராஜன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.