நான் இந்தப் பேரு வாங்க இங்க வரல.. வாய்ஸ் ரைஸ் பண்ணாதிங்க.. இது சௌந்தர்யாவின் சம்பவம்
பிக்பாஸ் வீட்டில் சுனிதாவாக மாறியுள்ள சௌந்தர்யா, அவர் பிக்பாஸ் வீட்டில் இதுவரை எப்படி நடந்து கொண்டுள்ளார் என்பதை நடித்துக் காட்டி சம்பவம் செய்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க ஆள் மாறாட்டம் எனும் டாஸ்கை பிக்பாஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொரு நபரை தேர்வு செய்து அவர்களின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றி நடித்துக் காட்டி வருகின்றனர். இந்தப் போட்டியில் அதிகம் சம்பவம் செய்து வருவது சௌந்தர்யா தான்.
சத்தத்தை காட்டும் சவுண்டு
இதுவரை எந்த டாஸ்கிலும் சரியாக விளையாடவில்லை. குழுவினருடன் ஒருங்கிணைப்பு இருந்தது இல்லை என ஏகப்பட்ட புகார்களை சமந்து வரும் சௌந்தர்யா, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார். சௌந்தர்யா பெரும்பாலும் சுனிதாவின் பேச்சால் எரிச்சலடைவார். இதனால், இப்போது அவர், சுனிதாவை பழிவாங்கும் நோக்கத்தில் அவரைப் போல நடித்து காண்பித்து வெறுப்பேற்றி வருகிறார்.
சுனிதா சக வீட்டாளர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டி இருப்பார். கடந்த வாரம் விஜய் சேதுபதி வீட்டில் யார் எந்த வேளையும் செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார், எந்த வேலையும் செய்யாமல் யார் இருக்கிறார் என்பதை மேனேஜர் எனும் பெயரில் விளக்குமாறு கூறி இருப்பார், இதில் பெண்கள் அணியினர் பெரும்பாலானோர் சுனிதாவையே கூறி இருப்பர்.