Kathiravan: ‘ஷிவின் காதல் நடிப்பா?’ போட்டு உடைத்த பிக்பாஸ் கதிரவன்!
BiggBoss 6 Tamil: ‘உறவினர்கள் உள்ளே வரும் டாஸ்கில், தன்னுடைய அக்கா வருவார் என ஷிவின் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அது அவருக்கு பயங்கர ஃபீல் தந்தது’ -கதிரவன்
பிக்பாஸ் சீசன் 6 தமிழில் நெஞ்சை வருடும் காதலாக இருந்தது ஷிவினின் காதல் தான். சக போட்டியாளர் கதிரவனை அவர் காதலித்ததும், அதன் பின் அவருக்கு ஒரு காதலி இருப்பது தெரிந்து, அவரை பார்த்து அவர் அழுததும், அதன் பின் கதிரவன் வெளியேறிய போது, கதறியதும், அனைவரும் பார்த்தது தான். உண்மையில், ஷிவின் காதலை கதிரவன் புரிந்து கொண்டாரா? இல்லையா? என்கிற குழப்பம் பலருக்கும் இருந்தது. அது தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் கதிரவன். இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘ஷிவின் ஜாலியாக தான் விளையாடிக் கொண்டிருந்தார், ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை. வெளியில் இருந்து உள்ளே வந்த பலர் , ‘நான் வெளியே சென்ற போது ஷிவின் அழுததாக’ கூறினார்கள். பொதுவாக கலாய்ப்பது அங்கு வழக்கமாக தான் இருந்தது. அப்படி தான் எல்லாரும் இருந்தோம்.
நாங்க எல்லாருமே எமோஷனாக இருந்தோம். கடிதம் எழுதும் வாரத்தில் எல்லாரும் உணர்வுபூர்வமாக இருந்தோம். உறவினர்கள் உள்ளே வரும் டாஸ்கில், தன்னுடைய அக்கா வருவார் என ஷிவின் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அது அவருக்கு பயங்கர ஃபீல் தந்தது.
நிறைய பேர் வீட்டில் இருந்து வரும் போது, நம்ம வீட்டில் யாரும் வரவில்லை என்றால் அது ஒரு வகையான ஏமாற்றம் தரும். அது தான் ஷிவினுக்கு நேர்ந்தது. அந்த உணர்ச்சை தான் ஷிவின் வெளிப்படுத்தினார். நான் கடைசி வரை ஷிவின் செய்தவை விளையாட்டுக்கு என்று தான் நினைத்தேன். அதனால் தான் அவரிடம் நான் என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.
என்னை பற்றி, அவங்களுக்கு எல்லா விசயமும் தெரியும். எனது வெளி உறவைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும். அதனால், அவர் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். என்னை பொருத்தவரை ஷிவின் ரொம்ப உறுதியானவர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நான் என் பணியை செய்திருக்கிறேன். சண்டைகளுக்குள் நான் செல்லவில்லை தான்; ஆனால் என் பணியை நான் செய்திருக்கிறேன். எதையும் தெரியாமல் நாம் தலையிடக்கூடாது என பொம்பை டாஸ்கிற்குப் பின் நான் முடிவு செய்துவிட்டேன்.
பிக்பாஸ் வீட்டில் இரு முறை ஐஸ்க்ரீம் வந்தது. இரண்டு முறையும் கடுமையான சண்டை நடந்தது. விக்ரமன், அசீம், ஷிவின் மூன்று பேருமே இறுதி போட்டிக்கு தகுதியானவர்கள் தான். அவர்களில் யார் வெற்றிருந்தாலும் நான் கத்தியிருப்பேன். அசீம் வெற்றி பெற்றதும் எனக்கு தோன்றியது, ஒருத்தன் மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும், அவன் தன்னை நிரூபித்து வெற்றி பெறுகிறான் என்றால் அவன் சிறந்தவன் தான். அது பெரிய விசயம் தான்.
இவர் ஏன் வெற்றி பெற வில்லை என்று கேட்க முடியாது. ஒருவரை வெற்றி பெற செய்ய, ஓட்டெடுப்பு நடந்திருக்கிறது. அதில் அதிக ஓட்டு பெற்று ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதை மதிக்கிறேன்,’’
என்று கதிரவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்