தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss 7 Tamil 14th Week Voting Details

Bigg Boss 7 Tamil: விஜய் வர்மாவா? மாயாவா? - யாரின் வாக்கு குறைவு?

Aarthi V HT Tamil
Jan 05, 2024 11:00 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் பற்றி பார்க்கலாம்.

மாயா VS விஜய் வர்மா
மாயா VS விஜய் வர்மா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் 7 இன் முதல் இறுதிப் போட்டியாளராக தேர்வான விஷ்ணுவைத் தவிர அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

 பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில் தினேஷ், மாயா, விஜய் வர்மா, மணி சந்திரா, அர்ச்சனா, விசித்ரா மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் இருந்தனர். வாரயிறுதியில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு இடையில் ரூ.16 லட்ச பணப்பெட்டியை எடுத்து கொண்டு பூர்ணிமா போட்டியில் இருந்து வெளியேறி சென்றார். அதனால் மீதம் தினேஷ், மாயா, விஜய் வர்மா, மணி சந்திரா, அர்ச்சனா, விசித்ரா மட்டுமே போட்டியில் தொடர்கிறார்கள்.

தற்போதைய வாக்களிப்பு போக்குகளின் படி, அர்ச்சனா ஆதரவாக அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார், அவருக்கு அடுத்தபடியாக மணி சந்திரா உள்ளார். சுவாரஸ்யமாக, கடைசி இடங்களில் விஜய் மற்றும் மாயா இடையேயான போட்டி நிலவி வருகிறது.

ஊடக அறிக்கையின் படி, விஜய் 6% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், மாயா முறையே 5% வாக்குகளைப் பெற்று சிரமப்படுகிறார். இந்த வாரம் நிலையில், வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக வாக்குப்பதிவுகள் சொல்கிறது.

வரும் நாட்களில் வாக்களிப்பு போக்குகள் எவ்வாறு மாறும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இதற்கிடையில், பிக் பாஸ் தமிழ் 7 ஒரு புதிய திருப்பத்தைக் காணும். விஜய் வர்மா பணப்பெட்டியை எடுப்பார் என சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

விஜய்யின் பெயரையே பெரும்பான்மையாக பேசப்பட்ட நிலையில், பூர்ணிமா அந்த பெட்டியை தூக்கிவிட்டு ஷோவில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.