Bigg boss 6 tamil promo: பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ஜனனி…பதறிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 33 ஆவது நாளிற்கான் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 33 நாட்கள் கடந்து உள்ளது. முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார்.
அடுத்ததடுத்த வாரங்களில் மாஸ்டர் சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.
இந்த வார எலிமி ஆயிஷா, அசீம், ஏடிகே, விக்ரமன், ராம், தனலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவ.11) பிக் பாஸ் நிகழ்ச்சியின் 33 ஆவது நாளிற்கான் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், இந்த வார முழுவதும் வீட்டில் டாஸ்க் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் சிறப்பாக பங்கெடுக்காத நபரை தேர்வு செய்யுமாறு பிக் பாஸ் கூறுகிறார்.
அப்போது, விக்ரமன் எழுந்து வந்து ஜனனியின் பெயரை கூறுகிறார். அதற்கு ஜனனி காரணம் கேட்டு, அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜனனி நானே ஜெயிலுக்கு செல்கிறேன் என சொல்லி கதறி அழுகிறார். உடனே அனைவரும் அவரை கட்டி அணைத்து சமாதானம் செய்கின்றனர்.
டாபிக்ஸ்