தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Berlin Teaser Out Money Heist Spin-off Series To Release On Netflix In December

Money Heist:என்ன ஆரம்பிக்கலாங்களா? வெளியானது மணி ஹெஸ்ட் சீரிஸின் புதிய அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 08, 2023 11:37 AM IST

மணி ஹெஸ்ட் சீரிஸில் இருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது

மணி ஹெஸ்ட் அப்டேட்
மணி ஹெஸ்ட் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

அரசின் அதிகாரங்களுக்கு எதிராக, அதன் முக்கிய வங்கி மற்றும் வருவாய் நிறுவனங்களில் குழு ஒன்று கொள்ளையடிக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தத்தொடர் உருவானது. இந்தத்தொடரில் வரும் பிரஃபோஸர், பெர்லின், டோக்கியோ, நைரோபி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்தக்கதாபாத்திரங்களின் பேரில் இணையதளங்களில் லட்சக்கணக்கான போலி கணக்குகள் உள்ளன. அந்த அளவுக்கு ரசிகர்களிடம் செல்வாக்கை பெற்றுள்ள இந்தத்தொடர் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அது என்ன அப்டேட் என்று கேட்கிறீர்களா.. அது வேறொன்றுமில்லை ‘மணி ஹெஸ்ட்’ ன் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான பெர்லினை வைத்து, ப்ரீக்குவல் ஒன்றை தயாரித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். ‘பெர்லின்’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த ப்ரீக்குவலானது இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பிரஃபோஸர் சகோதரராக இந்தக்கதாபாத்திரம் வலம் வருகிறது; இந்தக் கதாபாத்திரத்தில் பெட்ரோ அலோன்சா நடித்துள்ளார். பிரஃபோஸருடன் இணைவதற்கு முன்னால் இந்தக்கதாபாத்திரம் வாழ்ந்த வாழ்கை இதில் இந்த சீசனில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதன் முதல் சீசனில் 8 எபிசோடுகள் இருக்கும். எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ மற்றும் அலெக்ஸ் பினா ஆகியோர் இணைந்து இதனை எழுதியிருக்கின்றனர்.

IPL_Entry_Point