BAYILVAN: அங்கு உனக்கு என்ன வேலை? - த்ரிஷாவிடம் கோபித்து கொண்ட விஜய் தாய் - கொளுத்தி போட்ட பயில்வான்-bayilvan ranganathan says vijay mother shoba got angry on her and scolded - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: அங்கு உனக்கு என்ன வேலை? - த்ரிஷாவிடம் கோபித்து கொண்ட விஜய் தாய் - கொளுத்தி போட்ட பயில்வான்

BAYILVAN: அங்கு உனக்கு என்ன வேலை? - த்ரிஷாவிடம் கோபித்து கொண்ட விஜய் தாய் - கொளுத்தி போட்ட பயில்வான்

Aarthi Balaji HT Tamil
Aug 23, 2024 04:06 PM IST

BAYILVAN: விஜய், த்ரிஷா தொடர்பாக நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த சர்ச்சைக்கு எண்ணெய் ஊற்றும் வகையில் ஒரு தகவலை முன்வைத்து உள்ளார்.

BAYILVAN: அங்கு உனக்கு என்ன வேலை? - த்ரிஷாவிடம் கோபித்து கொண்ட விஜய் தாய் - கொளுத்தி போட்ட பயில்வான்
BAYILVAN: அங்கு உனக்கு என்ன வேலை? - த்ரிஷாவிடம் கோபித்து கொண்ட விஜய் தாய் - கொளுத்தி போட்ட பயில்வான்

இந்த நிலையில் திடீரென்று, இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விஜய் விரைவில் தன்னுடைய மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே த்ரிஷா, விஜயுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். கூடவே, த்ரிஷாவின் இன்னொரு புகைப்படமும் வைரல் ஆனது. அதில் ஒருவரின் ஷூ இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், அந்த ஷுவானது நடிகர் விஜய் உடையதுதான் என வட்டமிட்டு போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதற்கு கூடவே பாடகியான சுசித்ரா, விஜய் த்ரிஷாவிடம் இருந்து விலகி, சங்கீதாவிடம் இணைந்து வாழ வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்ஃபியால் வந்த பிரச்னை

த்ரிஷாவும், தளபதி விஜயும் இணைந்ததாக சமீபத்தில் ஒரு கிசுகிசு காட்டுத்தீயாக பரவியது. இது அனைத்தும் ஜூன் 22 அன்று விஜய் 50 வயதை எட்டியபோது தொடங்கியது, அடுத்த நாள், த்ரிஷா சமூக ஊடகங்களில் விஜய்யுடன் பிறந்தநாள் செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் தொடர்பு

இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பல புதிய விஷயங்கள் வெளியாகின. எக்ஸ் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை 'டிகோட்' செய்யத் தொடங்கியதால், 'விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் தொடர்பு' என்கிற அளவுக்கு கிசுகிசுக்கள் வந்தன.

இதற்கிடையில், நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த சர்ச்சைக்கு எண்ணெய் ஊற்றும் வகையில் ஒரு தகவலை முன்வைத்து உள்ளார்.

அங்கு என்ன வேலை

தனது கருத்தை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறுகிறார். அவர் பேசுகையில், ” விஜய் சமீபத்தில் தனது தாயின் விருப்பப்படி சாய் பாபா கோயிலை கட்டினார். இது பெரும் செய்தியாக இருந்தது. இந்த கோவிலுக்கு த்ரிஷா சமீபத்தில் சென்று உள்ளார். இதையறிந்த விஜய்யின் தாய் ஷோபா, த்ரிஷாவிடம் கோயிலுக்கு ஏன் போனீர்கள், அங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார். 

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை “என  கூறினார்.

நடிகர் விஜய் நடித்து இருக்கும் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மறுபக்கம் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

குறிப்பு: இது பயில்வானின் சொந்த கருத்து. இதற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.