வீடியோ காலில் பேசி பழகினோம்.. தனுஷை கல்யாணம் பண்ணினது இப்படி தான்.. கலா மாஸ்டரால் வெளிவந்த உண்மை
வீடியோ காலில் பேசி பழகியதன் மூலம் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷை தனக்கு பிடித்து விட்டதாக மணமகள் அக்ஷயா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் தான். இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க சினிமா பிரபலங்கள் பலரும் ஜப்பானுக்கு படை எடுத்தனர். இது தொடர்பா வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கிங்ஸ் 24X7 யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
மக்கள் ஹீரோ நெப்போலியன்
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன், 80,90களின் காலகட்டத்தில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தன. இவரது பஞ்சு மிட்டாய் சேலைக் கட்டி பாடல் இன்றளவும் ட்ரெண்டிங். இப்படி, சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நெப்போலியனின் மகன் அரியவகை தடை பிடிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவருக்கு இந்தியாவில் சரியான சிகிச்சை அளிக்க முடியாது என்பதால், குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்த நெப்போலியன்
அங்கு அவர், ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தார். பின் இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார்.
