Bayilvan Ranganathan: பாதியில் விட்ட பாஸ்கரன்;முச்சந்தியில் மோகன்;மகள் முன்னால் நிகழ்ந்த லீலைகள் - லட்சுமியின் மறுபக்கம்
நடிகை லட்சுமியும், அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகளுக்கு தாங்கள் சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற தன்னம்பிக்கை இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கைக்கு நடிகைகள் தயாராக இருக்க மாட்டார்கள்
நடிகை லட்சுமி குறித்து அவரது முன்னாள் கணவரான மோகன் சர்மா சில பர்சனலான விஷயங்களை அண்மையில் பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கிங் 24/7 சேனலுக்கு பேசி இருக்கிறார்
இது குறித்து அவர் பேசும் போது, “ நடிகை லட்சுமி மிக அருமையாக நடிக்க கூடியவர். சாவித்திரி, பத்மினி, சரிதா உள்ளிட்டோர் வரிசையில் லட்சுமியும் ஒரு நல்ல நடிகையாக வலம் வந்தார்.
நடிகை லட்சுமியும், அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகளுக்கு தாங்கள் சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற தன்னம்பிக்கை இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கைக்கு நடிகைகள் தயாராக இருக்க மாட்டார்கள்.
அவர்களது கழுத்தில் தாலி கட்டிய பின்னர், நீ இப்பொழுது ஒரு குடும்பப் பெண் என்று சொன்னால், அவர்கள் அப்படியே அடங்கி கட்டுக்குள் வந்து விடுவார்கள். காரணம், அவர்களை குடும்பப் பெண் என்று சொல்லும் பொழுது, அவர்களுக்கு அந்த இடத்திற்கான எல்லா விஷயங்களும் குடி வந்துவிடும்.
நடிகையைச் சுற்றி அவர்களுக்கு வேலை செய்வதற்காக நிறைய ஆட்கள் இருப்பார்கள். இதனால் அவர்கள் கொஞ்சம் சோம்பேறியாக ஆகிவிடுவார்கள்.
பல படங்களில் நடிகையாக நடித்துக்கொண்டிருந்த நடிகை லட்சுமி சேலத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமும் ஆனார். அவருக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின்னர் லட்சுமி நடிக்கச் செல்வேன் என்று சொல்ல, அதற்கு மாப்பிள்ளை வீட்டு தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் கணவன் மனைக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்தன. முட்டல் மோதல்கள் நிகழ்ந்தன.
இதனையடுத்து ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தார்கள். அதன்படி அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விவகாரத்து செய்து கொண்டார்கள்.
இதனிடையே பாஸ்கரன் வேறு திருமணம் செய்து கொண்டார். லட்சுமி பழைய படி நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த சமயத்தில் தான் மோகன் சர்மா என்ற கேரள நடிகருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்படுகிறது. ஒரு முறை லட்சுமி அவரை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்ல, அவரும் சென்று இருக்கிறார்.
ஷாப்பிங் முடிந்தவுடன் லட்சுமி மோகனை ரூமிற்கு அழைத்து அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் மோகன் சர்மா, நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறி கடைக்குச் சென்று குங்குமமும் தாலியும் வாங்கி அவருக்கு கட்டிவிட்டு இருக்கிறார். பின்னர் இருவரும் புழங்கியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மகள் ஐஸ்வர்யாவிடமும் மோகன் சர்மா நன்றாகவே பழகி இருக்கிறார் இதையடுத்து ஐஸ்வர்யா ஒரு நாள், மோகன் சர்மாவிடம் நீங்கள் இல்லாத சமயத்தில் லட்சுமி அம்மா பல ஆண்களுடன் பேசுவதாக கூறியிருக்கிறார்.
இதனால் ஐஸ்வர்யாவிற்கும் லட்சுமிக்கும் பயங்கர சண்டைகள் வந்திருக்கின்றன. அம்மாவுக்கும் ஒரு மகளுக்கும் எந்த விஷயத்தில் வாக்குவாதம் வரக்கூடாதோ, அந்த விஷயத்தில் வாக்குவாதமானது அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில் மோகன் ஷர்மா சம்பவத்தில் தலையிட்டு, உன் மகள் சொல்லும்படி அளவுக்கு நீ இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு லட்சுமி அதையெல்லாம் நீ சொல்லாதே; நான் நடிகை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மனம் வந்த மோகன் சர்மா லட்சுமியிடம் இருந்து விலகி தனக்கென்று தனியாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்