தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanangaan Trailer: பாலாவுடன் பிளவு.. சூர்யா எடுத்த முடிவு சரியா? வணங்கான் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Vanangaan Trailer: பாலாவுடன் பிளவு.. சூர்யா எடுத்த முடிவு சரியா? வணங்கான் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Kalyani Pandiyan S HT Tamil
Jul 08, 2024 06:38 PM IST

Vanangaan Trailer: அருண்விஜய் நடிப்பில், இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது

Vanangaan Trailer: பாலாவுடன் பிளவு.. சூர்யா எடுத்த முடிவு சரியா? வணங்கான் ட்ரெய்லர் எப்படி இருக்கு?
Vanangaan Trailer: பாலாவுடன் பிளவு.. சூர்யா எடுத்த முடிவு சரியா? வணங்கான் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

இந்தப்படத்தில் முதலில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கமிட் ஆனவர் நடிகர் சூர்யா. ஆனால், படப்பிடிப்பில் நடந்த சில கசப்பான சம்பவங்கள், அவரை மிகவும் பாதித்து விட, அவர் படப்பிடிப்பிற்கு போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்று சொல்லப்பட்டது. 

இந்த நிலையில், இயக்குநர் பாலா, அந்தப்படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், தொடர்ந்து அதே டைட்டிலில், அருண் விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது வணங்கான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, திரைத்துறையில் பாலாவை பற்றி நெகட்டிவான விமர்சனங்கள் இருக்கும் நிலையில், ஒரு தயாரிப்பாளராக அவரை தேடிச் சென்றது ஏன்? வணங்கான் படத்தின் டீசர் எப்போது வருகிறது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் இந்துஸ்தான் தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, “பாலா ஒரு வியாபாரி கிடையாது அவர் நினைத்ததை திரையில் கொண்டு வர வேண்டும் என்று போராடும் ஒரு கலைஞன். பிற இயக்குநர்கள் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால், அந்த கதாபாத்திரம் வெறும் போலீசாக வந்து போலீசாகவே சென்றுவிடும்.

ஆனால் பாலா ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால், அதற்கென்று ஒரு தனி உடல் பாணியை வைப்பார். அவரது முடி எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்பார். வசனங்களை எப்படி பேச வேண்டும் என்பதற்கு தனி மொழி நடையை உருவாக்குவார்.

அவருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவர் ஷூட்டிங்கை இழுத்தடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரை நாம் சரியாக இருந்துவிட்டால், அவரும் சரியாக இருப்பார்.

உண்மையாகச் சொல்கிறேன் எனக்கு பாலாவுடன் எந்தவிதமான ஒரு அசௌகரியமும் இதுவரை நடக்க வில்லை. ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் பொழுது, ஒரு நல்ல இயக்குனரை நாம் தேடிச் செல்வது ஒன்றும் தவறில்லை என்று எனக்குத் தோன்றியது.

படம் வரும்பொழுது பாருங்கள். அந்த படத்திற்காக அவர் எப்படி உழைத்திருக்கிறார் என்று. எனக்கு அவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அவரது தொழிலின் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் வேண்டுமென்றே தயாரிப்பாளரின் பணத்தை செலவழிப்பவர் அல்ல.

இங்கு ரிலேஷன்ஷிப் என்பது கண்ணாடி மாதிரி தான் நாம் அழுதால் அதுவும் அழும். நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும். பாலாவும் சிலம்பரசன் போல ஒரு குழந்தை தான்.

நிறைய வீடியோக்களில் அவர் அடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது அவர் மிகவும் சாதுவான ஒரு ஆள். அவர் கமர்சியலாக பணம் சம்பாதித்து இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால். எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம்அவருடைய கம்பேக் படமாக இது இருக்கும்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்