Sheetal: ‘அவ்வளவு வலியை கொடுத்துட்டாரு.. நல்ல வேளை கல்யாணம் பண்ணல.. அவர பத்தி பேச விரும்பல'- ஷீத்தல்!-babloo sheetal latest interview about reason separation between with her boyfriend babloo prithiveeraj - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sheetal: ‘அவ்வளவு வலியை கொடுத்துட்டாரு.. நல்ல வேளை கல்யாணம் பண்ணல.. அவர பத்தி பேச விரும்பல'- ஷீத்தல்!

Sheetal: ‘அவ்வளவு வலியை கொடுத்துட்டாரு.. நல்ல வேளை கல்யாணம் பண்ணல.. அவர பத்தி பேச விரும்பல'- ஷீத்தல்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 27, 2024 08:27 AM IST

Babloo sheetal: முதலில் சூழ்நிலை மாறியது. அதன் பின்னர் நாங்கள் இருக்கும் இடம் வெவ்வேறானது. அதன் பின்னர் எங்களுடைய வாழ்க்கையும் தனித்தனியாக பிரிந்தது. அதனால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. நான் என்னுடைய அம்மாவின் வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தேன். - ஷீத்தல்!

Sheetal: ‘அவ்வளவு வலியை கொடுத்துட்டாரு.. நல்ல வேளை கல்யாணம் பண்ணல.. அவர பத்தி பேச விரும்பல'- ஷீத்தல்!
Sheetal: ‘அவ்வளவு வலியை கொடுத்துட்டாரு.. நல்ல வேளை கல்யாணம் பண்ணல.. அவர பத்தி பேச விரும்பல'- ஷீத்தல்!

காதலின் வலி அதிகம்

இது குறித்து அவர் பேசும் போது, “எனக்கும் சரி, பப்லுவுக்கும் சரி மக்கள் மத்தியில் ஒரு விதமான இமேஜ் இருக்கிறது. நாங்கள் எங்களுடைய வாழ்க்கையின் மோசமான பக்கங்களை அவர்களிடத்தில் காண்பிக்கவில்லை. எங்களுக்குள் நடந்த அந்த பர்சனலான விஷயங்களை ஷேர் செய்து, நாங்கள் ஒருவரை ஒருவர் வருத்தமடைய செய்ய விருப்பப்படவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அந்த உறவில் இருந்து வெளியேற முடிவு செய்தோம்.

அந்தப் பிரிவின் வழியாக எனக்கு எந்த வலியும் இல்லை, நான் சகஜமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கும் அந்த காதலின் வலி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் வெளியே செல்ல விரும்பவில்லை. காரணம் என்னவென்றால், அது மக்கள் மத்தியில் எங்கள் மீது இருக்கும் அபிப்ராயத்தை முற்றிலுமாக மாற்றக்கூடும். நாங்கள் மீண்டும் சேர்வதற்கு முயற்சி செய்தோம் அந்த முயற்சியின் பலன்தான் அனிமல் படத்தின் புரோமோஷனில் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருந்தது.

ஷீத்தல்
ஷீத்தல்

ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தேன்.

எல்லோரும் நீங்கள் பிரிந்த போது ஏன் நேர்காணல் கொடுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மையாகச் சொல்கிறேன். அந்த பிரிவு உடனடியாக நடந்து இருந்தால், நான் என்ன நடந்தது என்பதை ஓப்பனாக கூறி இருப்பேன். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. முதலில் சூழ்நிலை மாறியது. அதன் பின்னர் நாங்கள் இருக்கும் இடம் வெவ்வேறானது. அதன் பின்னர் எங்களுடைய வாழ்க்கையும் தனித்தனியாக பிரிந்தது. அதனால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. நான் என்னுடைய அம்மாவின் வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தேன்.

 

ஷீத்தல்
ஷீத்தல்

அந்த சமயத்தில் எனக்கு எழுதுவது தான் ஆறுதலாக இருந்தது இதனை நான் பிரேக்கப்பில் இருப்பவர்களுக்கு கூறிக் கொள்கிறேன், தயவு செய்து எழுத ஆரம்பிங்கள். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை அதில் இருந்து வெளியே வருவதற்கு எனக்கு அதிக நேரம் பிடித்தது.

நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வந்து விட்டீர்கள் என்றால், அந்த நபர் நம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதை பற்றி யோசிக்க கூடாது. காரணம் என்னவென்றால், நீங்கள் அப்படி யோசிக்கும் பட்சத்தில் மீண்டும் அதே வலையில் சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நான் பப்லுவை விட்டு பிரியும் பொழுது அவர் கொடுத்த மோதிரம் முதல் பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் கொடுத்துவிட்டுதான் வந்தேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.