Trisha: ‘திரிஷா தான் வேணும்’- அடம்பிடித்த அதிமுக முக்கியப் புள்ளி.. பகீர் பேட்டி அளித்த மாஜி அதிமுக நிர்வாகி!-av raju told the story of trishas arrival at kuvathur resort in a sensational interview - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha: ‘திரிஷா தான் வேணும்’- அடம்பிடித்த அதிமுக முக்கியப் புள்ளி.. பகீர் பேட்டி அளித்த மாஜி அதிமுக நிர்வாகி!

Trisha: ‘திரிஷா தான் வேணும்’- அடம்பிடித்த அதிமுக முக்கியப் புள்ளி.. பகீர் பேட்டி அளித்த மாஜி அதிமுக நிர்வாகி!

Marimuthu M HT Tamil
Feb 20, 2024 05:33 PM IST

திரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஏ.வி.ராஜூ அளித்த பேட்டி பரபரப்பு ஆகியுள்ளது.

‘திரிஷா தான் வேணும்’- அடம்பிடித்த அதிமுக முக்கியப் புள்ளி.. பகீர் பேட்டி அளித்த மாஜி அதிமுக நிர்வாகி!
‘திரிஷா தான் வேணும்’- அடம்பிடித்த அதிமுக முக்கியப் புள்ளி.. பகீர் பேட்டி அளித்த மாஜி அதிமுக நிர்வாகி!

அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த வெங்கடாஜலம், கூவத்தூரில் செய்த சேட்டைகள் பற்றி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேட்டிகொடுத்துள்ளார். அதில், ‘அதிமுகவில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடாஜலம் கூவத்தூரில் இருக்கும்போது தன்னுடன் பொழுதைக் கழிக்க நடிகை திரிஷா வேண்டும் என்று அடம்பிடித்தார். நான் கூவத்தூரில் இருக்கும் வெங்கடாஜலத்தைப் பார்க்கப்போனேன். வெங்கடாஜலம் மது குடிக்க மாட்டார். ஆனால், அதற்குப் பதிலாக கூவத்தூரில் இருக்குபோது திரிஷாவை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். இது நடிகர் கருணாஸுக்கு தெரியும். எந்ததெந்த எம்.எல்.ஏக்களுக்கு நடிகைகள் வேண்டுமோ, அவர்களுக்கு நடிகைகளிடம் பேசி

அவர்களை கூவத்தூருக்கு அழைத்து வந்தது கருணாஸ் தான். பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. வெங்கடாஜலத்துக்காக நடிகை திரிஷாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து அவரை அழைத்து வந்தனர். நாங்கள் பார்த்ததை கேட்டதைச் சொல்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குநர் சேரன், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நடிகை திரிஷா மீது அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜூவை கைது செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பதிவில், ’வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷால் மற்றும் கார்த்தியை உள்ளடக்கிய நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.