Tamil Movies On This Day: போஸ்டர், விளம்பரம் இல்லாமல் வெளியான அஜித் படம்.. ஆகஸ்ட் 31 இல் ரிலீஸான தமிழ் படங்கள் லிஸ்ட்!-august 31 released the tamil movies list mankatha avana ivana - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies On This Day: போஸ்டர், விளம்பரம் இல்லாமல் வெளியான அஜித் படம்.. ஆகஸ்ட் 31 இல் ரிலீஸான தமிழ் படங்கள் லிஸ்ட்!

Tamil Movies On This Day: போஸ்டர், விளம்பரம் இல்லாமல் வெளியான அஜித் படம்.. ஆகஸ்ட் 31 இல் ரிலீஸான தமிழ் படங்கள் லிஸ்ட்!

Aarthi Balaji HT Tamil
Aug 31, 2024 07:09 AM IST

Tamil Movies On This Day: ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

Tamil Movies On This Day: போஸ்டர், விளம்பரம் இல்லாமல் வெளியான அஜித் படம்.. ஆகஸ்ட் 31 இல் ரிலீஸான தமிழ் படங்கள் லிஸ்ட்!
Tamil Movies On This Day: போஸ்டர், விளம்பரம் இல்லாமல் வெளியான அஜித் படம்.. ஆகஸ்ட் 31 இல் ரிலீஸான தமிழ் படங்கள் லிஸ்ட்!

அப்படி உருவானத் திரைப்படம் தான் மங்காத்தா. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில், நடிகர் அஜித் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சமயம் அது. கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயா அழகிரியின் கிளைவுடு நைன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, மங்காத்தா உருவாகிறது என்கிற அறிவிப்பு வெளியான பிறகு தான், அஜித்-திமுக உறவில் விரிசல் இல்லை என்பதே ஊர்ஜிதமானது.

படத்திற்கு போஸ்டர் இல்லை, இந்த நாளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு இல்லை. இரவு 10 மணிக்கு முடிவு செய்கிறார்கள், ‘நாளை படம் ரிலீஸ்’ என. ஆகஸ்ட் 31ம் தேதி, எந்த பண்டிகையும் இல்லாத நாள். ‘பரவாயில்லை, அந்தம்மா மனசு மாறுவதற்குள் ரிலீஸ் பண்ணிடலாம்’ என இரவோடு இரவாக முடிவு செய்து, இப்போது மாதிரி அப்போது சமூக வலைதளம் கூட பெரிய அளவில் இல்லை. தியேட்டர்களுக்கு தான் தகவல் போகிறது. தவிர, சன்டிவியில் திடீர் அறிவிப்பு வெளியாகிறது.

ரசிகர்களுக்கு தீயாய் தகவல் பரவ, இரவோடு இரவாக டிக்கெட் முன்பதிவு நடந்து, மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது மங்காத்தா. போஸ்டர் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், ஏன்.. அறிவிப்பு கூட இல்லாமல் வெளியான ஒரே படம் தமிழ் சினிமா வரலாற்றில் மங்காத்தாவாக மட்டுமே இருக்க முடியும்.

அவனா இவன்

தமிழில் பல்வேறு மிரட்டலான த்ரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எஸ். பாலசந்தர். அடிப்படையில் வீணை கலைஞரான இவர் பின்னர் இயக்கம் மீது ஆர்வம் கொண்டு பல படங்களை இயக்கியதுடன், நடிகராகவும் தோன்றியுள்ளார்.

1951 இல் வெளியான அமெரிக்க திரைப்படமான ஏ பிளேஸ் இன் தி சன் என்ற படத்தை அடிப்படையாக கொண்டு அவனா இவன் படத்தை உருவாக்கியிருந்தார்.

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த உண்மை கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஆன் அமெரிக்க டிராஜெடி என்ற நாவலை அடிப்படையாக வைத்துதான் ஏ பிளேஸ் இன் தி சன் படமே உருவாக்கப்பட்டிருந்தது.

பணக்கார பெண்னை திருமணம் செய்வதற்காக லிவிங் டூ கெதரில் இருந்து வரும் காதலியை கொலை செய்வதும், போலீசார் கொலையாளியை கைது செய்வதும் தான் படத்தின் ஒன்லைன். இதில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் குழந்தை கதாபாத்திரங்களாக தோன்றும் மாஸ்டர் ஸ்ரீதர், குட்டி பத்மினி ஆகியோர் கொலையாளியை போலீசிடம் பிடித்து கொடுக்கும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருப்பார்கள். 1951 ஆம் ஆண்டு இதே நாளில் இப்படம் வெளியானது.

சமுத்திரம்

மூன்று சகோதரர்களின் ஒரே தங்கை என்பதால் காவேரி பாசமாக வளர்க்கப்படுகிறார். ஊரில் கோயிலுக்கு மரியாதை வழக்கமாக சரத்குமாருக்கு கிடைக்கும். அதை வில்லனின் தந்தை தட்டிப்பறிக்க முயல்கிறார். ஆனால் ஊர்மக்கள் அதை சரத்குமாருக்கு கொடுக்க, ஆத்திரமடைந்த தந்தை சரத்குமாரை பழிவாங்க விரும்புகிறார்.

இதனால் தனது மகனுக்கு காவேரியை திருமணம் செய்துகொண்டு சென்று கொடுமை செய்கிறார். அவர்களை ஏமாற்றி அவர்களின் சொத்து மொத்தத்தையும் அபகரித்துக்கொள்கிறார். இதற்கிடையில் சரத்குமாருக்கும், அபிராமிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் பொருத்துக்கொள்ளும் பெண்ணாக அபிராமி இருக்கிறார்.

முரளிக்கும், சிந்து மேனனுக்கும் திருமணம் நடக்கிறது. சிந்து மேனன் அவர்களின் அத்தை மஞ்சுளாவின் மகள். சண்டை சச்சரவுடன் குடும்பம் நடக்கிறது. கல்லூரியில் படிக்கும் மனோஜ், அரசியல்வாதி மகள் மோனலை திருமணம் காதலிக்கிறார். அவர்களின் குடும்ப பிரச்னைகள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பது ஒருபுறம் சென்றுகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.