Tamil Movies On This Day: அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நிறைந்த படம்.. ஆகஸ்ட் 30 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்!-august 30 released the tamil movies list sundara travels anbu thangai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies On This Day: அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நிறைந்த படம்.. ஆகஸ்ட் 30 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்!

Tamil Movies On This Day: அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நிறைந்த படம்.. ஆகஸ்ட் 30 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்!

Aarthi Balaji HT Tamil
Aug 30, 2024 07:07 AM IST

Tamil Movies On This Day: ஆகஸ்ட் 30 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நிறைந்த படம்.. ஆகஸ்ட் 30 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்!
அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நிறைந்த படம்.. ஆகஸ்ட் 30 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்!

சுந்தரா டிராவல்ஸ்

சுந்தரா டிராவல்ஸ் படம் 2002ஆம் ஆண்டு நடிகர்கள் முரளி, ராதா, வடிவேலு மற்றும் ஒரு ஓட்டை சுந்தரா டிராவல்ஸ் என்னும் பஸ் கூட்டணியில் வெளியாகி, நகைச்சுவையில் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இப்படத்தை இயக்குநர் அசோகன் இயக்கியிருந்தார். பரணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டால் டிங் டிங்’ என்னும் பாடல் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. சுந்தரா டிராவல்ஸ் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.

ஜமீன்தார்

1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ஜமீன்தார். பி.வி. கிருஷ்ணன் இயக்கி இப்பட கதையை ஜலகண்டபுரம் என்பவர் எழுதினார். இதில் எஸ்.ஏ.நடராஜ் மற்றும் மாதுரி தேவி நடித்துள்ளனர். இன்றுடன் ஜமீன்தார் படம் வெளியாகி, 72 ஆண்டுகள் ஆகிறது.

அன்பு தங்கை

1974 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், அன்பு தங்கை. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ரிலீஸான இதில், முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்து இருந்தனர்.

இதில் ஜெயலலிதாவுடன், கமல் ஹாசன் ஒரு பாடலுக்கு மட்டும் புத்தர் வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார். படத்தில் இடம் பெற்று இருக்கும், ஆடி வா அழகுராணி பாடல் பலருக்கு பிடித்தமான ஒன்று.

ஊரெல்லாம் உன் பாட்டு

ஊரெல்லாம் உன் பாட்டு 1991 ஆம் ஆண்டு சிராஜ் இயக்கத்தில் வெளியானது. இதில், ராமராஜன் , வைதேகி மற்றும் ஐஸ்வர்யா நடித்து உள்ளனர். இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

சும்மா நச்சுனு இருக்கு

சும்மா நச்சுனு இருக்கு படத்தை பி.விமல் தயாரித்து ஏ.வெங்கடேஷ் எழுதி இயக்குகிறார். தமன், விபா ஆகியோர் நாயகனாக நடித்து உள்ளனர். அச்சு இசையமைத்துள்ளார். 14 நபர்கள் ஒரே இடத்தில் எப்படி தங்கள் பிரச்னைகளை தீர்த்து கொள்ளுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக விவரிக்கிறது கதை.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள் திரைப்படம், த்ரில்லர் படங்களின் வரிசையை சேர்ந்தது. எல்லா தொடர் கொலைகாரர்களையும் போலவே, ருத்ராவும் பாதிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கொலை செய்வதில் தனது சொந்த பாணியைக் கொண்டுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்கள் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் ரத்தத்தை வடிகட்டுவதன் மூலம் கொலை செய்கிறார், மேலும் அவர்கள் உதவியின்றி இறப்பதைப் பார்த்து மகிழ்கிறார்.

2018 ஆம் ஆண்டு இதே நாளில் இப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய, இதில் அதர்வா , ராஷி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப், நயன்தாரா நடித்து உள்ளார். விஜய் சேதுபதி கேமியோவாக நடித்தார். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் ,

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.