Ashwini Nambiar: ‘அவ்வளவும் வெள்ளை நிற உடைதான்.. தண்ணில நனைஞ்சு ஆஸ்துமாவே வந்துடுச்சு' - அஸ்வினி பேட்டி!
Ashwini Nambiar: அந்தப்பாடலின் கடைசி ஷாட்டில், நானும் விக்னேஷும் நடந்து வந்து கொண்டிருப்போம். அப்போது நான் பாரதிராஜா சார் சொன்னது போல நடந்து வருகிறேன் என்று நினைத்து நடந்து வந்தேன். - அஸ்வினி பேட்டி!
பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலேயே படத்தில் இடம் பெற்ற ‘ஆத்தங்கரை மரமே’ பாடலில் பணியாற்றிய அனுபவம் பற்றி நடிகை அஸ்வினி பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
பாரதிராஜா சார் சொல்லிக்கொடுத்ததுதான்.
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் அந்தப்பாடலில், நான் எப்படி நடிக்க வேண்டும். நான் எப்படி வெட்கப்பட வேண்டும், எப்படி மேலே பார்க்க வேண்டும், எப்படி கீழே பார்க்க வேண்டும், எல்லாமே பாரதிராஜா சார் சொல்லிக்கொடுத்ததுதான்.
அந்தப்பாடலின் கடைசி ஷாட்டில், நானும் விக்னேஷும் நடந்து வந்து கொண்டிருப்போம். அப்போது நான் பாரதிராஜா சார் சொன்னது போல நடந்து வருகிறேன் என்று நினைத்து நடந்து வந்தேன். ஆனால், அவர் என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே என்னிடம் என்ன பாடலுக்கு ஏற்றது போல நடந்து வருகிறாய் என்று கேட்டார். நான் உடனே பாடலுக்கு ஏற்றபடிதானே சார் நடந்து வர வேண்டும் என்று சொல்ல, இல்லை அந்த பாடலுடைய ரிதமும் நீ நடந்து வருவதும் ஒன்று போல் இருக்கக் கூடாது என்றார்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த ஷாட்டிற்கு பாரதிராஜா சார் பல டேக்குகளை வாங்கினார். அதன் பின்னர் அவரே எப்படி வெட்கத்தோடு நடந்து வர வேண்டும் என்று நடித்துக் காட்டினார். அதை பார்த்து நான் நடித்தேன். அதன் பின்னர்தான் அவர் அந்த ஷாட்டை ஓகே செய்தார்.
அதேபோல, அந்தப்பாடலில் அருவியில் நானும் விக்னேஷும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொண்டு நடித்திருப்போம். அந்தப் பாடலில் அது மிகவும் குறைவான நேரம் தான் வரும். ஆனால், அந்தக் காட்சியை நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் எடுத்தோம். அது அருவி தண்ணீர் என்பதால் அதிக குளிர் இருந்தது. அதன் காரணமாக எனக்கு வீசிங் வந்து, ஒரு கட்டத்தில் ஆஸ்துமாவே வந்து விட்டது. ஆனால் அதையும் வைத்து தான் நான் அந்த பாடலில் நடித்தேன்.
விக்னேஷ் தான் அந்தப் படத்தில் ரொமான்ஸ் செய்ய அதிகமாக கஷ்டப்பட்டார். எனக்கு நடனம் தெரியும் என்பதால், ஓரளவுக்கு எக்ஸ்பிரஷன்களை நான் பிடித்து விட்டேன். ஆனால் விக்னேஷால் அது முடியவில்லை. கடைசியில் சார் சத்தம் போட்டு சத்தம் போட்டு வேலை வாங்கினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்