Ashok Selvan Marriage: அசோக் செல்வனுக்கு எங்கு? எப்போது திருமணம்.. இதோ திருமண அழைப்பிதழ்
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது.
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. இதனை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு அடுத்த மாதம் 13 ஆம் தேதி திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்