Keerthi Pandian: ‘அசோக் மனசு தங்கம்டி.. அவ்வளவு உண்மையா இருக்கான்’ - திருமண நாளில் நெகிழ்ந்த கீர்த்தி பாண்டியன்!-ashok selvan and keerthi pandian celebrated their first anniversary today her throwback interview here - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Keerthi Pandian: ‘அசோக் மனசு தங்கம்டி.. அவ்வளவு உண்மையா இருக்கான்’ - திருமண நாளில் நெகிழ்ந்த கீர்த்தி பாண்டியன்!

Keerthi Pandian: ‘அசோக் மனசு தங்கம்டி.. அவ்வளவு உண்மையா இருக்கான்’ - திருமண நாளில் நெகிழ்ந்த கீர்த்தி பாண்டியன்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 13, 2024 09:11 PM IST

Keerthi Pandian: அசோக் ரொம்ப ரொம்ப உறுதியான மனுஷன். அது வாழ்க்கையா இருந்தாலும் சரி, தொழிலா இருந்தாலும் சரி, அவ்வளவு உறுதியா இருப்பார். ரொம்ப உண்மையா இருப்பார். - கீர்த்தி பாண்டியன்!

Keerthi Pandian: ‘அசோக் மனசு தங்கம்டி.. அவ்வளவு உண்மையா இருக்கான்’ - திருமண நாளில் நெகிழ்ந்த கீர்த்தி பாண்டியன்!
Keerthi Pandian: ‘அசோக் மனசு தங்கம்டி.. அவ்வளவு உண்மையா இருக்கான்’ - திருமண நாளில் நெகிழ்ந்த கீர்த்தி பாண்டியன்!

என்னில் சிறந்தவற்றை..

மேலும் அதில், “ என்னில் இருந்து சிறந்தவற்றை நீங்கள் வெளியே கொண்டு வருகிறீர்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், முன்னதாக தன்னுடைய கணவர் அசோக் செல்வன் குறித்து கீர்த்தி பாண்டியன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு கொடுத்த பேட்டியை பார்க்கலாம்.

அந்த பேட்டியில் தன்னுடைய கணவர் அசோக் செல்வனை பற்றி பேசிய அவர், “ அடிப்படையிலேயே அசோக் ரொம்ப ரொம்ப மரியாதையான ஆள். மனிதர்களோட எண்ணங்களும், கருத்துக்களும் அவர்களுக்கு சொந்தமானது அப்படிங்கிறது அவரோட தாட். அத, அந்த மரியாதையோடு விட்டுடுவார். அதுக்குள்ள தேவையில்லாம மூக்க நுழைச்சு, அவங்க ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறாங்கன்னு நினைக்காம, எல்லாத்தையும் ஏத்துக்குவார்.

அவருக்கு ரொம்ப இரக்க குணம். அவருக்கு உண்மையில கோல்டன் ஹார்ட். இது 100 சதவீதம் உண்மைங்க. அத நான் பல நேரத்துல பார்த்து இருக்கேன். உண்மையிலேயே அசோக் ரொம்ப ஒரு அழகான ஆன்மா!

அவருகிட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு. நான் அதுல டாப் 3 குணங்கள இங்க சொல்றேன்.

அசோக் ரொம்ப ரொம்ப உறுதியான மனுஷன். அது வாழ்க்கையா இருந்தாலும் சரி, தொழிலா இருந்தாலும் சரி, அவ்வளவு உறுதியா இருப்பார்.

ரொம்ப உண்மையா இருப்பார். அவருடைய எண்ணத்துல, செயல்ல அப்படின்னு, எல்லாத்துலேயும் ஒரு உண்மை தன்மை இருக்கும்.

இப்ப சொல்ற இந்த குவாலிட்டி, நான் அவர்கிட்ட ரொம்ப வியந்து பார்த்தது.

அவர்கிட்ட நிறைய மெனக்கெடல் இருக்கும்.இந்த 10 வருஷத்துல நிறைய விஷயங்களுக்கு அவர் மெனக்கெட்டு இருந்துருக்கார்.

இப்போ கல்யாணம் முடிஞ்சு ஒரே வீட்ல இருக்கோம். வீட்ல சமைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவது அப்படின்னு எல்லா விஷயத்தையும் பிரிச்சு வேலை செய்றோம். ஆனால் அவர் இதையெல்லாம் செஞ்சதே கிடையாது.

ஆனா, அவருக்கு நாமதான் பார்த்துக்கணும் அப்படிங்கிற புரிதல் தானாவே இருக்கு. நான் ரொம்ப சுத்தம் பார்ப்பேன். எனக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும். ஆனா, அசோக் அதுக்கு அப்படியே ஆப்போசிட்!

ஆனால் அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு மெனக்கெடுறார். அவருக்கு ஒன்னு பிடிச்சிருச்சுன்னா போதும், அதுக்காக ரொம்ப மெனக்கெடுவார். இது எங்க உறவு மட்டுமல்ல, குடும்பத்திற்கு இதே போல செய்றார்.” இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.