Arvind swamy: குண்டா… சொட்டை.. குழந்தைட்ட போய்.. - அரவிந்த் சாமி பகிர்ந்த சோக சம்பவம்!
அதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதை பார்த்து நான் வருத்தப்படவும் இல்லை. நான் அழகாக இருக்கிறேன் என்று நான் நினைக்கவே இல்லை. இப்போது நான் அசிங்கமாக இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை.
உடல் நிலை சரியில்லாமல் இருந்த காலங்கள் தான் எதிர்கொண்ட சோதனைகளை பிரபல நடிகரான அரவிந்த் சாமி பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “நான் குண்டாக சொட்டையாக இருந்ததை மறைக்க விரும்பவில்லை. அதற்கான காரணம், அப்போது என்னுடைய உடல் நிலையானது சரியாக இல்லாமல் இருந்ததே!
அதற்காக நான் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். இதனை கிண்டல் செய்யும் விதமாக என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சிலர் சில மீம்களை போட்டிருக்கலாம். சிலர் தெரிந்தே கூட அதை செய்திருக்கலாம். அதை நான் இங்கு நியாயப்படுத்த வரவில்லை. அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது நம் கையில் இருக்கிறது.
அதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதை பார்த்து நான் வருத்தப்படவும் இல்லை. நான் அழகாக இருக்கிறேன் என்று நான் நினைக்கவே இல்லை. இப்போது நான் அசிங்கமாக இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை.
ஆனால் இந்த காலங்களில், ஒரு சம்பவம் என்னுடைய மனதை மிகவும் பாதித்தது. நான் ஒரு முறை ஸ்ரீலங்காவிற்கு என்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்று இருந்தேன். அப்போது என்னுடைய குழந்தைகள் மிக மிக சிறிய குழந்தைகள்.
அங்கு ஹோட்டல் ஒன்றில் நான் சாப்பாடு எடுக்கச் சென்ற போது, அங்கு இருந்த பெண்மணி ஒருவர் என் குழந்தையை பார்த்து அப்பாவை குறைவாக சாப்பிட சொல் என்று சொன்னார். இது கண்டிப்பாக என்னை பெரிதாக பாதிக்காது. ஆனால் என்னுடைய குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். நீங்கள் என்னைப் பற்றி எது வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் அதை நான் எடுத்துக்கொள்வேன். ஆனால் குழந்தை அப்படி கிடையாது. ஆகையால் மனிதர்கள் நிலைமை அறிந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்