Arvind Swami: “என்ன மாதிரி கலரா மாப்பிள்ளை வேணுமா..? தோலுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம்.. இனவெறிய ஏன்? -அரவிந்த்சாமி!
Arvind Swami: என்னை வெள்ளையாக இருக்கிறேன் என்று சொல்லாதீர்கள். எனக்கு அது பிடிக்காத விஷயம். அது ஒரு தவறான விஷயம். தோல் நிறத்தை வைத்து, இது அழகு, அது அழகில்லை சொல்லக்கூடாது. - அரவிந்த் சாமி!

Arvind Swami: “என்ன மாதிரி கலரா மாப்பிள்ளை வேணுமா..? தோலுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம்” - கடுப்பான அரவிந்த்சாமி!
பொதுவாகவே, உனக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டால், அரவிந்த் சாமி மாதிரி வெள்ளையாக மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது அரவிந்த் சாமிக்கு சுத்தமாக பிடிக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது குறித்து அவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக, சினிமா பேசலாம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.