Arun Vijay: விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயமா? - அருண் விஜய் ஷாக் பதில்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையாரை வேண்டி மாலை அணிந்து விரதம் இருந்து நேற்று இரவு கிரிவலம் வந்த நடிகர் அருண் விஜய் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் ஆகியோரை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் போதெல்லாம் மன நிம்மதியும் தெளிவும் சந்தோசமும் தனக்கு கிடைப்பதாகவும், அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை, நேற்று இரவு ரசிகர்களோடு கிரிவலம் வந்ததாகவும் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும்போதெல்லாம் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதாக தெரிவித்தவர்.
தொடர்ந்து பேசிய அருண் விஜய் மிஷன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும், பாலா தயாரிப்பில் படப்பிடிப்பு நிறைவு ஆகும் தருவாயில் உள்ள வணங்கான் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மக்கள் மற்றும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பணியாற்றுபவர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இளம் தலைமுறைகள் சாமி பக்தியும் இறைவனிடம் ஒரு அச்சமும் தெளிவான முடிவு எடுக்கும் அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும், திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயமாக தான் பார்ப்பதாகவும் அவர் முதலில் அறிவிக்க வேண்டும் இளைஞர்களையும் புதியதாக வருபவர்களையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்க வேண்டும் என்றும் தான் அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை என்றும் தனது நடிப்பு பயணம் நிறைய உள்ளதாகவும் அதில் சாதிக்க நிறைய பயணங்களை தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுப்பணிகளையும் தான் மேற்கொள்ள இருப்பதாகவும் விரைவில் பார்த்துக் கொள்ளலாம் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
திரைப்பட சங்கத்தில் மூத்தவர்கள் பலர் உள்ளார்கள் இளையவர்கள் தாங்கள் அவர்கள் பின் நின்று பக்கபலமாக இருப்போம் என்றும் நடிகர் சங்க கட்டிடம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து கார்த்திக்கிடம் பேசிய போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்திருப்பதாகவும்.
விரைவில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து அதிகாரபூர்வ முடிவை சங்கத்தினர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஜெயிலர் படம் குறித்து கருத்து கேட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு நானும் ரஜினிகாந்தின் ரசிகன் என்றும் ஜெய்லர் படத்திற்காக தான் ஆவலோடு இருப்பதாகவும்” தெரிவித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்