தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Archana Ravichandran Latest Interview About To The Criticism That She Won Bigg Boss Through Pro

Archana Ravichandran: ‘தூற்றுவார் தூற்றட்டும்.. பி.ஆர்.ஓ மூலம் கப் அடிச்சேனா?’ - விமர்சகர்களை வெளுத்த அர்ச்சனா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 23, 2024 06:08 PM IST

வார இறுதி நாட்களில் பேசும் விஷயங்களை வைத்து மட்டும் தான் நம்மால் நிலைமையை புரிந்து கொள்ள முடியும். அந்த சமயங்களில் கமல் சார் சொன்ன சில விஷயங்களை வைத்து தான் நான் சில விஷயங்களை திருத்திக் கொண்டேன்.

அர்ச்சனா பேட்டி!
அர்ச்சனா பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே வைல்டு கார்டு என்ட்ரி வழியாக உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறி இருப்பது அனைவருக்கு ஆச்சரியம் தரும் விஷயமாக மாறி இருக்கிறது. 

இந்த நிலையில் அவர் பிஆர்ஓ மூலமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி பேர் சம்பாதித்து இருக்கிறார் என்றும் அவரது வெற்றியும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இது குறித்து அர்ச்சனா பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், விளக்கம் கொடுத்திருக்கிறார். 

அவர் பேசும் போது, “எனக்கா 19 கோடி ஓட்டுகள்…அவ்வளவு தூரம் என்னை இந்த நிகழ்ச்சியில் மக்கள் பார்த்து இருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கே இருக்கிறது. உண்மையில் வீட்டிற்குள் இருக்கும் பொழுது நமக்கு எந்த ஒரு விஷயமும் தெரியாது.

வார இறுதி நாட்களில் பேசும் விஷயங்களை வைத்து மட்டும் தான் நம்மால் நிலைமையை புரிந்து கொள்ள முடியும். அந்த சமயங்களில் கமல் சார் சொன்ன சில விஷயங்களை வைத்து தான் நான் சில விஷயங்களை திருத்திக் கொண்டேன். 

உண்மையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் பொழுது மிகவும் அமைதியான நிதானமான ஒரு மனுஷியாக மாறி இருக்கிறேன். முன்பெல்லாம் மிகவும் அதிக ஆர்வத்தோடு உற்சாகமாக விஷயங்களை அணுகுவேன். 

இப்போது அது இல்லை. இன்னொரு விஷயம் நான் பிஆர்ஓ வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினேன் என்ற விமர்சனம் இருக்கிறது. 

அவர்கள் வழிக்கே நான் வருகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்ததற்காக எனக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு 19 கோடி மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இதில் 18 கோடி பேர் என்னை பிடித்து ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னை பிடிக்காமல் 1 கோடி பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்று வைத்தால் கூட, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் எனக்கு கிடைத்து விடும்;அந்த ஒரு கோடி என் கையில் இருந்தால், நான் சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து, அதில் கதாநாயகியாக நடித்து விடுவேன். அதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்குள்ளேயே வந்தேன்.

இந்த விமர்சனம் எப்படி இருக்கிறது என்றால், எனக்கு ஓட்டு போட்ட மக்களையே சந்தேகப்படுவது போல இருக்கிறது. சில இடங்களில் நான் ஜெயிக்க வேண்டும் என்று ஓட்டு போட்டதை விட, நான் ஜெயிக்க கூடாது என்று ஓட்டு போட்டவர்களே அதிகம். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் புழுதி வாரி தூவட்டும் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று பேசினார்

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.